100 ஆண்டுக்கு பின் வரும் பங்குனி உத்திரத்திற்கு இவ்வளவு சிறப்பா?
பங்குனி உத்திரம் -மார்ச் 25ஆம் தேதி பங்குனி உத்திரம் கொண்டாடப்பட உள்ளது. இன்று சந்திர கிரகணமும் சேர்ந்து வருகிறது ,இதன் சிறப்புகள் மற்றும் அன்று திருமண தடை நீங்க செய்ய வேண்டியவை என்னவென்று இப்பதிவில் பார்ப்போம்.
பங்குனி உத்திரம் நாள் :
- மார்ச் 24ஆம் தேதி உத்திர நட்சத்திரமும், பவுர்ணமியும் தொடங்கிவிடும். ஆனால் சூரிய உதயத்திற்கு பிறகு துவங்குவதால் சாஸ்திரப்படி அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.
- ஆகவேதான் மார்ச் 25 ஆம் தேதி அனைத்து கோவில்களிலும் கொண்டப் படவுள்ளது, குறிப்பாக அனைத்து முருகன் கோவிலிலும் காவடி ,பால்குடம் போன்ற நிகழ்ச்சிகள் கோலாகலாமா கொண்டாடப்படுகிறது.
பங்குனி உத்திரத்தின் சிறப்புகள்:
- பங்குனி உத்திரம் என்பது மாதங்களில் 12 வது மாதமும், பனிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும் சேர்ந்து வருவதாகும் . அன்று நூறு ஆண்டுகளுக்குப் பிறகு சந்திர கிரகணமும் இணைகிறது.
- பங்குனி உத்திரம் என்பது முருகப்பெருமானுக்குரிய முக்கிய விரதங்களில் ஒன்று. அது மட்டுமல்லாமல் பல கடவுள்களுக்கும் இன்றைய நாள் தொடர்புடையது தான். அதனால்தான் இன்றைய தினத்தை கல்யாண திருநாள் எனவும் கூறுவார்கள்.
- ஏனென்றால் இன்று பல கோவில்களிலும் திருக்கல்யாணம் நடத்தப்படும். அன்று தான் பல கடவுள்களுக்கும் திருமணம் நடைபெற்றது. சிவபெருமானும் பார்வதி தேவியும் மீனாட்சிசுந்தரேஸ்வரராக காட்சி கொடுத்த தினம்.
- சிவபெருமான் மன்மதனை எரித்து பிறகு ரதியின் வேண்டுதலின் காரணமாக திரும்பவும் உயிர் கொடுத்த தினமாகும். ஸ்ரீராமர் சீதாதேவி திருமணம் நடந்த நாளாகும். 27 கன்னியர்களை சந்திரன் மனைவியாக ஏற்றுக் கொண்ட தினமாகும்.
- மகாலட்சுமி தாயார் விரதம் இருந்து மகாவிஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கியம் கிடைத்த நாளாகும். ஐயப்பன் அவதரித்த நாளும் இந்த நாள் தான்.முருகர் தெய்வானை திருமணம் நடந்த நாள் பங்குனி உத்திரம் தான்.
திருமண தடை நீங்க செய்ய வேண்டியவை:
பங்குனி உத்திரம் அன்று சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் ,வெற்றிலை பாக்கு, பூ போன்ற மங்களப் பொருட்களை அவர்களுக்கு கொடுத்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
ஆகவே திருமணதிற்காக காத்திருப்பவர்கள் விரதம் இருந்து அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று திருமண கோலத்தில் இருக்கும் இறைவனைப் பார்த்து மனதார வேண்டிக் கொள்வது சிறப்பாகும்.