பஞ்சாப் – டெல்லி இன்று மோதல்.. ஆடுகளம், லெவன் பற்றிய சுவாரஸ்ய தகவல்..!

Rishabh Pant

PBKSvDC  ஐபிஎல் 17-வது தொடரின் முதல் போட்டி நேற்று சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை அணியும், மும்பை அணியும் மோதியது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்று பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான 2-வது லீக் ஆட்டம் சண்டிகரில் உள்ள மகாராஜ் யத்விந்திர சிங் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு டாஸ் போட்டி நடைபெறும். 3:30 மணிக்கு பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன.

READ MORE- அப்படி போடு! தளபதி விஜய்யின் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட விராட் கோலி!

ஐபிஎல் 2024-ல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஷிகர் தவானும், டெல்லி அணிக்கு ரிஷப் பந்த் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளனர்.  இந்த இரு அணிகளும் ஐபிஎல் தொடரில் மொத்தம் 32 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா 16  போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர். இந்த வெற்றி, தோல்வி புள்ளி அடிப்படையில் பார்க்கையில் இரு அணிகளும் சமமான பலத்தில் உள்ளது.

இன்றை போட்டியில் மைதானத்திலும் சரி, மைதானத்திற்கு வெளியில் இருந்து பார்ப்பவர்கள் அனைவரது பார்வையும் ரிஷப் பண்ட் மீது தான் இருக்கும். ஏனென்றால் ரிஷப் பண்ட் கடந்த 2022 -ம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட சாலை விபத்தில் காயமடைந்தார்.பின்னர் தொடர்ந்து ரிஷப் பண்ட் சிகிக்சை பெற்று வந்தநிலையில் கடந்த சில மாதங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

இருப்பினும் 15 மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக களத்தில் களமிறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்கிறாரா..? இல்லையா..? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

READ MORE- தோனியின் புதிய சாதனை.. முதல் இடத்தை பிடிக்க துரத்தும் ஜடேஜா…

பஞ்சாப் அணியில் எதிர்பார்க்கப்படும் லெவன்:

ஜானி பேர்ஸ்டோவ், ஷிகர் தவான் (கேப்டன்), பிரபாசிம்ரன் சிங், லியாம் லிவிங்ஸ்டோன், சாம் குர்ரான், ஜிதேஷ் சர்மா (வி.கே.), ரிஷி தவான், ஹர்ஷல் படேல், ககிசோ ரனாடா, அர்ஷ்தீப் சிங், ராகுல் சாஹர் ஆகியோர் அணியில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி அணியில் எதிர்பார்க்கப்படும் லெவன்:

பிரித்வி ஷா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிஷப் பந்த் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், லலித் யாதவ், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, முகேஷ் குமார், கலீல் அகமது ஆகியோர் அணியில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆடுகளம் நிலவரம்:

சண்டிகரில் வானிலை படி ஈரப்பதம் 26 சதவீதம் இருக்கும், போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்பு குறைவு என கூறப்பட்டுள்ளது. இந்த புதிய மைதானத்தில் சில இந்திய உள்நாட்டுப் போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளது. இந்தப் புதிய மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க சிரமப்பட்டுள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் இந்த போட்டியில் குறைந்த ஸ்கோர் நிர்ணயிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil news live
UdhayanidhiStalin
Chennai Super Kings IPL Auction
India won the Test Match
Heavy Rain - cyclone
meena (10) (1)
Red Alert - Heavy Rains