நாங்க அப்போவே சொன்னோம்.. ரஷ்யாவை எச்சரித்த அமெரிக்கா.!

Russia : ரஷ்யாவில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் குறித்து இம்மாத தொடக்கத்தில் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவின் வெளியே கிரோகஸ் நகரில் நேற்று பிரபல இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியில் சுமார் 5000 பேர் கலந்து கொண்டனர். அப்போது சில மர்ம நபர்கள் உள்ளே புகுந்து வெடிகுண்டு வீசியும் துப்பாக்கியால் சூடு தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 150 பேர் கடயமடைந்தனர்.  இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. மஸ்கோ இசைநிகழ்ச்சி தாக்குதல் குறித்து பல்வேறு உலக நாட்டு தலைவர்கள், தங்கள் வருத்தத்தையும் கண்டனத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த தாக்குதலை மார்ச் மாதத் தொடக்கத்திலேயே அமெரிக்க உளவுத்துறை ரஷ்யாவிடம் கூறி எச்சரித்துள்ளது என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவலின் படி, இந்த மாத தொடக்கத்தில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் திட்டமிடப்பட்ட பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படும் என்றும், பெரிய கட்டிடங்கள் அல்லது இசை நிகழ்ச்சிகள் குறிவைக்கப்படலாம் என்றும் உளவுத்துறை கூறிய தகவல்களை ரஷ்ய அதிகாரிகளுடன் அமெரிக்கா பகிர்ந்து கொண்டதாக அமெரிக்க பாதுகாப்பு கவுன்சில் வெள்ளை மாளிகை மூலம் தெரிவித்துள்ளது.