CSKvsRCB : அனுஜ் ராவத் அசத்தல் ..! சென்னை அணிக்கு 174 ரன்கள் இலக்கு ..!
CSKvsRCB : ஐபிஎல் 2024 தொடரின் முதல் போட்டியில், சிஎஸ்கே அணியும் பெங்களூரு அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தொடக்க வீரர்காளாக விராட் கோலியும், ஃபாப் டுப்ளஸியும் களமிறங்கினர். ஃபாப் டுப்ளஸி ஆட்டம் தொடங்கியது முதல் சென்னை அணியின் தீபக் சஹர் பந்து வீச்சை பவுண்டரிகள் அடித்து பறக்க விட்டார்.
ஃபாப் டுப்ளஸியின் ஆட்டம் கட்டுக்கடங்காமல் போகையில் சென்னை அணியின் இடது கை பந்து வீச்சாளரான முஸ்தபிசுர் ரஹ்மான், அதிரடியாக விளையாடி கொண்டிருந்த ஃபாப் டுப்ளஸியின் விக்கெட்டை எடுத்து அசத்தினார். இதனால், டுப்ளஸி 35 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். பெங்களூரு அணியின் இரு தூண்களில் ஒரு தூணான டுப்ளஸி விக்கெட்டை எடுத்தவுடன் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து பெங்களூரு அணி தடுமாறி கொண்டிருந்தது.
Read More :- கெய்லுக்குப் பிறகு வேகமாக வரலாறு சாதனை படைத்த விராட் கோலி..!
இதை தொடர்ந்து, மறு முனையில் விராட் கோலி தனது விக்கெட்டை இழக்காமல் ரன்களை எடுத்து கொண்டிருந்தார். அதன் பின், முஸ்தபிசுர் ரஹ்மானிடம் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். காயத்தில் இருந்து மீண்டு வந்த முஸ்தபிசுர் ரஹ்மான் மிக சிற்பபாக பந்து வீசி பெங்களூரு அணியை திணற செய்தார். அதன் பின் களத்தில் இருந்த அனுஜ் ராவத் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் நிதானத்துடன் விளையாடி ரன்களை உயர்த்தினர்கள்.
சென்னை அணியின் துஷார் தேஷ்பாண்டேவின் ஓவரை இரு வீரர்களும் நாலாபக்கமும் சிதறடித்தனர். இறுதியாக, ஆர்சிபி அணி 20 ஓவருக்கு 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் தினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் 38* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்ததுடன், அனுஜ் ராவத் 25 பந்துக்கு 48 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார். சென்னை அணியில் அதிகபட்சமாக முஸ்தபிசுர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.