கருப்புச் சட்டையில் களமிறங்கிய மு.க அழகிரி..!துவங்கியது அமைதி பேரணி மெரினாவை நோக்கி..!
கருணாநிதியின் நினைவிடம் நோக்கி மு.க.அழகிரி அமைதி பேரணி துவங்கியது.
சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகே அமைதி பேரணி துவங்கியது . இதில்கருப்புச் சட்டை அணிந்து மகன் தயா அழகிரி, மகள் கயல்விழியுடன் மு.க.அழகிரி அமைதி பேரணியில் கலந்து கொண்டுள்ளார்.
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமைக்கு எதிராக அவரது அண்ணன் அழகிரி தனது ஆதரவாளர்களுடன் சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் நோக்கி பேரணி சென்றார்.2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
DINASUVADU