நடிகர் ஜெமினி கணேசன் பற்றிய 4 சுவாரஸ்ய தகவல்கள்.!
Gemini Ganesan: கருப்பு-வெள்ளை சினிமா காலகட்டத்தில் ஜாம்பவான்கள் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசன் தவிர, அந்த காலத்தை கலக்கிய மற்றொருவர் ஜெமினி கணேசன் என்றே சொல்லலாம். அப்போதைய காதல் மன்னன் என்று அழைக்கப்பட்ட ஜெமினி கணேசனின் நினைவு தினம் இன்று.
READ MORE – உலகநாயகன் Fanboy நீங்கதான்! லோகேஷின் முரட்டு ரொமான்ஸ் சம்பவம்?
அப்பவே தமிழை தாண்டி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இருநூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் என்றும் நிலைத்து நிற்கும் அற்புத நடிகரான ஜெமினி கணேசனின் (மார்ச் 22) இன்று 19-வது நினைவு தினமாகும். இன்றைய தினத்தில் அவரது பற்றிய 4 சுவாரஸ்ய தகவல்கள் குறித்து பார்க்கலாம்.
1. ஜெமினி கணேசனுக்கு முதல் வைக்கப்பட்ட பெயர் ‘கணபதி சுப்பிரமணிய சர்மா’ என்று கூறப்படுகிறது. 2. ஜெமினி கணேசனின் சித்தப்பா மகள் தான் முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஆவார். 3. ஜெமினி கணேசன் கடைசியாக நடித்த தமிழ் படம் அவ்வை சண்முகி திரைப்படமாம். இந்த படத்தில் கமல்ஹாசன் என பலர் நடித்திருந்தனர்.
READ MORE – ஒருத்தர் விரல் கூட படாது…ஷங்கர் வார்த்தையை நம்பி ஏமாந்த ‘பாய்ஸ்’ நடிகை புவனேஸ்வரி?
இந்த படம் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியானது. 4. ஜெமினி கணேசன் சொந்தமாக ஒரே ஒரு தமிழ் படத்தை தயாரித்திருக்கிறார். அந்த படத்தில் 9 கெட்டப்பில் நடித்திருக்கிறார், அந்த படத்தின் பெயர் நான் அவன் இல்லை.
ஜெமினி கணேசன்
ஜெமினி கணேசன் தனது 19 வயதில், அலமேலுவை மணந்தார், அவருக்கு ரேவதி, கமலா, ஜெயலட்சுமி மற்றும் நாராயணி ஆகிய நான்கு மகள்கள் உள்ளனர். 1953-ல் சாவித்திரியுடன் மனம் போல மாங்கல்யம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். இதனை தொடர்ந்து அவர் தனது முதல் மனைவியை இருந்த போதே சாவித்திரியை மணந்தார்.
ஒரு காலத்தில் சாவித்திரியின் கேரியர் உச்சத்தில் இருந்தபோது ஜெமினி கணேசனின் படங்கள் தோல்வியடைந்தன. சாவித்திரி ஒருசில சமயங்களில் கணேசனை அவமானப்படுத்தியதாக கிசுகிசுக்கப்படுகிறது.
READ MORE – கலைஞருக்கு விழா நடத்திய விஜயகாந்த்! அவருக்கு இப்படி செய்திருக்க கூடாது உருகிய தியாகு….
இதனால் இருவரிடையே கருத்து மோதல் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இவர்களை தொடர்ந்து நடிகை புஷ்பவல்லியை மணந்து கொண்டார், அப்போது காதல் மன்னன் என்று சும்மாவா சொன்னார்கள்? எடுத்துக்காட்டு இதை தவிர வேறென்ன வேண்டும்.