மீண்டும் தனுசுடன் இணையும் மிரட்டல் இயக்குனர் – ரசிகர்கள் உற்சாகம்
தனுஷ் கையில் தற்போது வடசென்னை, என்னை நோக்கி பாயும் தோட்டா, மாறி-2 என பல படங்கள் உள்ளது. இது இல்லாமல் இயக்கத்தில் ஒரு படத்தையும் எடுக்க ரெடியாகிவிட்டார்.
இப்படத்தில் தனுஷ் தவிர, முன்னணி நடிகர் ஒருவர் கூட நடிக்கவுள்ளாராம், இந்நிலையில் தனுஷ் இதையெல்லாம் முடித்துவிட்டு, மீண்டும் வெற்றிமாறனுடன் இணையவுள்ளாராம். இப்படத்திற்கான பேச்சு வார்த்தை ஏற்கனவே தொடங்க, படத்தை கலைப்புலி தாணு தயாரிப்பாளர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தனுஷ் கலைப்புலி தாணு தயாரிப்பில் மூன்று படங்கள் நடிப்பார் என்றும் முன்பே கிசுகிசுக்கப்படுகின்றது.