சென்னையில் பாஸ்பரஸ் வெடித்து +2 மாணவன் உயிரிழப்பு! அதிர்ச்சி சம்பவம்
Chennai: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் பாஸ்பரஸ் வெடித்ததில் பிளஸ் 2 பள்ளி மாணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ஜிகேஎம் காலனி பகுதியில் தான் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது, சம்பவத்தை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர்.
Read More – அதிமுகவை அசிங்கப்படுத்த வேண்டாம்…. முடங்கும் இரட்டை இலை.? ஓபிஎஸ் புதிய மனு.!
ஆதித்ய பிரணவ் என்ற மாணவர் பாஸ்பரஸ் உள்ளிட்ட பொருட்களை வைத்து ஆய்வு செய்த போது இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது, வேதியல் பொருட்களை கொண்டு சோதனை செய்வதில் குறித்த மாணவருக்கு அதீத ஆர்வம் இருந்துள்ளது.
Read More – நீங்கள் முடிவு எடுக்கலனா நாங்கள் எடுக்க நேரிடும்.. ஆளுநர் ரவிக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை!
புதிதாக எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆதித்ய பிரணவுக்கு இருந்த ஆர்வமே அவரின் உயிருக்கு எமனாக மாறியுள்ளது. வேதியல் பொருட்கள் வெடித்தத்தில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்துள்ளார், பாஸ்பரஸ் வெடித்ததன் காரணமாக அக்கம்பக்கத்தில் இருந்த ஐந்து வீடுகள் சேதமடைந்துள்ளன, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.