குட்கா முறைக்கேடு…!தமிழகத்தில் மொத்தம் 40 இடங்கள் …!தமிழக டி.ஜி.பி,அமைச்சர் என நீளும் சிபிஐ சோதனை பட்டியல் …!
குட்கா விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக சி.பி.ஐ. செய்தி தொடர்பாளர் அபிஷேக் தயாள் கூறுகையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் சி.பி.ஐ அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் வீடுகளிலும் ,தமிழக டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் வீட்டிலும் சோதனை என்று தெரியவந்துள்ளது. முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் சென்னை, திருவள்ளூர், விழுப்புரம் மற்றும் தூத்துக்குடியிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
சி.பி.ஐ அதிகாரிகள் குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.