நண்பர் அம்மாவின் இறந்த செய்தி…500 காரில் வந்த விஜயகாந்த்! ஸ்தம்பித்து போன காவல் துறை!

vijayakanth

Vijayakanth: கேப்டன் விஜயகாந்தின் நெருங்கிய நண்பரான நடிகர் தியாகு, விஜயகாந்த் பற்றிய ஒரு சுவாரிஸ்ய சம்பவத்தை பகிர்ந்துள்ளார். தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தனது அம்மா இறந்த செய்தி கேட்டு விஜயகாந்த் வந்த தருணத்தை பகிர்ந்து கொண்டார்.

READ MORE – ப்ரோ நமக்கு செட் ஆகாது! சூர்யாவின் ஹிட் பட வாய்ப்பை நிகாரித்த விஜய்?

திரைத்துறையை தாண்டி விஜயகாந்த் செய்த நல்ல விஷயங்களை பற்றி பல பிரபலங்கள் பல பேட்டிகளில் பேசியிருக்கின்றனர். ஆனால், விஜயகாந்திடம் மிகவும் நெருக்கமாக பழகியவர்கள் கூறும் தகவல்கள் மிகவும் சுவாரிஸ்யமாக இருக்கும். அந்த வரிசையில் தான் நடிகர் தியாகு இருக்கிறார். விஜயகாந்த் இறந்த பின், அவரது இல்லத்திற்கு சென்ற அனுபவங்கள் குறித்து பேசியது உருக வைத்தது.

READ MORE – தவளை லெக் பீஸ் சூப்பரு…கமல் பட ஷூட்டிங்கில் சத்யராஜ் செய்த சம்பவம்.!

அந்த வகையில் தியாகு தனது அம்மா இறந்த செய்தி குறித்து பேசுகையில், ‘விஜயகாந்த் போன் பண்ணறாரு, என்னடானு கேட்டாரு இருக்கன்பா…செலவுக்கு ஏதாவது காசு வேணுமா கேட்டாரு ஒன்னும் வேண்டாம்னு நல்லா இருக்கேன் சொன்னேன். நான் வரட்டுமா கேட்டாரு, வேண்டாம்ப்பா சொன்னேன்… இல்லப்பா நான் வருவேன் என்றார்.

மறுநாள் நாள் கால் பண்ணாரு திருச்சி ஏர்போர்ட்-ல இறங்கி உன்ன பாக்க வாரேன் சொன்னாரு, நான் வேண்டாம் ஏத்துக்குனு கேட்டேன். நீ ஒன்னும் கவலை படாதா பற்றம் படாதானு சொன்னாரு, சொன்ன மாதிரி ஒரு 500 கார்ல வந்தாரு, என்னோட வீடு மெயின் ரோடுல இருக்கும். வண்டி எல்லாம் நின்னு மெயின் ரோடு அடைச்சு ஸ்தம்பித்து போய் விட்டது.

READ MORE – ஜப்பான் பட தோல்விக்கு கார்த்தி தான் காரணம்… பிக் பாஸ் பாவா ஓபன் டாக்.!

ஒரு 2 மணி நேரம் இருந்து கவலை படாதா நான் இருக்கேன் பேசிட்டு இருந்தார். ட்ராபிக் ஆனதும் எஸ்பி வந்து கார் எடுங்க சார் மெயின் ரோடு அப்படினு சொல்ல, விஜயகாந்த் நான் துக்கம் விசாரிக்க வந்திருக்கேன், என்னோட நெருங்கிய நண்பன் எடுக்க முடியாது என்று எஸ்பியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் விஜகாந்த்.

அப்போது ஜெயலலிதா அம்மா ஆட்சி நடைபெற்றது, விஜயகாந்த் உடனே போய் அந்த அம்மாகிட்ட சிஎம் கிட்ட போய் சொல்லுன்னு சொன்னார். நான்தான் அப்ரோ பிரச்சனை வேண்டாம் நீ வந்ததே சந்தோசம் தாண்டானு அனுப்பி வைத்தேன் என்று கூறினார்.

நன்றி கலாட்டா….

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்