இந்த 5 செயல்கள் உங்களை வாழ்வில் தோற்கடித்து விடும்.!

5 Bad Habits

Bad Habits : உலகில் உள்ள அனைவருக்குமே வாழ்வில் ஏதேனும் ஒரு துறையில், அதிலும் நமக்கு பிடித்த துறையில் வெற்றியடைய வேண்டும் என்பது கனவாக இருக்கும். ஆனால் 99 சதவீதம் பேர் அதனை அடைவதில்லை. மீதமுள்ள ஒரு சதவீதம் பேர் மட்டுமே தங்களுக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுத்து அதில் சிறப்பாக செயல்பட்டு அதன் மூலம் வாழ்வில் வெற்றியாளர்களாக மாறி விடுகின்றனர்.

அதற்கு வெற்றியாளர்கள் எதையெல்லாம் கடைப்பிடித்தார்கள் என்பதை விட எந்த செயலையெல்லாம் தவிர்த்தார்கள் என்பது மிக முக்கியமாக ஒன்று. அப்படி நம்மை வாழ்வில் தோல்வியாளராக மாற்றும் 5 பழக்க வழக்கங்களை இந்த குறிப்பில் காணலாம்.

கவனச்சிதறல் :

கவனச்சிதறல் தற்போதைய நவீன காலகட்டத்தில் என்பது வெகு சாதாரணமாக நிலவி வருகிறது. தற்போது பெரும்பாலானோர் கையில் இன்னொரு விரலாக மொபைல் போன் உள்ளது. அது இல்லாமல் சிலர் கழிவறைக்கு கூட செல்ல மறுக்கின்றனர். இதன் காரணமாக தங்களுக்கு தேவையான விஷயத்தில் கவனத்தை செலுத்த மறுக்கின்றனர். இல்லையென்றால் ஏதோ ஒரு பொருள் மீதோ, ஏதோ ஒரு செயல் மீதோ , சிலர் நபர்கள் மீதோ தங்களது கவனத்தை செலுத்தி தங்கள் வாழ்விற்கு தேவையானதை செய்ய, அதில் கவனத்தை செலுத்த மறந்து விடுகின்றனர்.  இதனை கருத்தில் கொண்டு களைய வேண்டும்.

கரணங்கள் கூறுதல் :

ஒருசிலரை நீங்கள் பார்த்திருப்பீர்கள், இந்த தவறை நான் செய்யவில்லை. இதற்கு அவர்தான் காரணம் என கூறுவார்கள். ஏன் சில நேரம் நாமே அவ்வாறு கூறிவிட்டு அந்த இடத்தில் இருந்தோ, இந்த பிரச்சனைகளில் இருந்தோ தப்பித்தால் போதும் என்று நினைத்து விடுவோம். பிறரை குறைகூறிவிட்டு சென்று விடுவோம். இந்த விஷயம் எனக்கு தெரிந்து இருந்தால் நான் ஜெயித்திருப்பேன். இவ்வளவு பணம் என்னிடம் இருந்தால் நான் தொழில் தொடங்கி இருப்பேன் என காரணத்தை கூறுவார்கள். இதனை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என களைந்து துணிந்து களமிறங்க வேண்டும்.

சோம்பேறித்தனம் :

பிறகு பார்த்துக் கொள்ளலாம். நான் நாளை முதல் உடற்பயிற்சி செய்வேன். விரைவில் நான் புதிய தொழில் தொடங்க உள்ளேன். விரைவில் நான் நல்ல வேளையில் இருப்பேன். இன்னும் நாள் கிடக்கிறது என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று ஒரு காரணத்தை மட்டும் வைத்துக் கொண்டு வாழ்வில் முன்னேறாமல் அதே இடத்தில் அப்படியே இருந்து விடுகிறோம். அதனை உடனடியாக களைந்து, ஒன்றே செய், நன்றே செய் அதனையும் இன்றே செய் என ஒரு செயலை செய்ய இப்போதே களமிறங்க வேண்டும்.

கற்பதற்கு தயக்கம் :

உண்மையில் வாழ்வில் முன்னேற வேண்டும் என்றால் புதிதாக ஒன்றை கற்றுக் கொண்டே ஆக வேண்டும். நாம் செய்யும் தொழிலில் முன்னேறுவதற்கு அடுத்து புதிதாக என்ன கற்றுக்கொள்ள வேண்டும், நான் செய்யும்வேலையில் முன்னரே புதிதாக என்ன செய்து கற்றுக்கொண்டு நமது பதவியை உயர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அதனை விடுத்து இந்த சம்பளம் போதும் இந்த வேலை போதும் என ஒரே இடத்தில் தேங்கி இருந்தால் நமது முன்னேற்றமும் அதே இடத்தில் தேங்கி இருந்துவிடும். இதனை அறிந்து புதியதாக கற்றுக் கொள்வதையோ, புதிதாக செய்வதால் தோல்வி அடைவதை நினைத்து பயந்து ஒதுங்கி விடக்கூடாது.

பிடித்ததை செய்ய மறுப்பது :

பிடித்ததை செய்யாமல் இருப்பது. இதனை பலரும் செய்திருப்பர். நமக்கு பிடித்த துறை ஒன்றாக இருக்கும், ஆனால் நமக்கு பிடிக்காத ஒரு துறையை தேர்ந்தெடுத்து அதில் நமக்கு இல்லாத ஆர்வத்தை வற்புறுத்தி வரவைத்து வேலை செய்து கொண்டிருப்போம். இது ஒரு கட்டத்தில் இனி ஏன் இந்த வேலையை செய்கிறோம் என தெரியாமலே மிஷின் போல போல நாட்டமில்லாமல் வேலை செய்து கொண்டிருப்போம். அதனை விடுத்து நமக்கு பிடித்த துறையில் சிறிது சிறிதாக கவனம் செலுத்த வேண்டும்.  பின்னர் அதனை முழு நேர தொழிலாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு நமக்கு பிடித்த விஷயங்களுக்கு நம்மை நகர்த்தி கொள்ள வேண்டும். அது நம்மை மேலும் மேலும் புதிதாக கற்றுக்கொள்ள மிக உதவியாக இருக்கும். நம் வாழ்வின் அடுத்த கட்டத்தில் கொண்டு செல்லும். இல்லையென்றால் அதிகம் பணம் தரும்  தொழில்படிப்பை தேர்வு செய்து அதில் நம் கவனத்தை செலுத்தி விட வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi