விவாகரத்து பின் ஒரே நிகழ்ச்சியில் முன்னாள் கணவர்.! பிரபலத்தின் காலில் விழப்போன சமந்தா!

Amazon OTT Event

Samantha: விவாகரத்துக்குப் பின், மூன்று ஆண்டுகள் கழித்து நடிகை சமந்தாவும் முன்னாள் கணவரும் நடிகருமான நாக சைதன்யாவும் ஒரு நிகழ்வில் பங்கேற்றனர். இந்த ஆண்டுக்கான ஓடிடி ரிலீஸ் லிஸ்ட் குறித்து அறிவிப்பதற்காக முன்னணி OTT தளமான அமேசான் நிறுவனம் நடத்திய நிகழ்வில் இவர்கள் இருவரும் கலந்துகொண்டனர்.

READ MORE – குஷ்பூவை தீவிரமாக காதலித்த அந்த நடிகர்? சீக்ரெட்டை உடைத்த பயில்வான் ரங்கநாதன்!

நடிகை சமந்தா தற்போது வருண் தவானுடன் இணைந்து சிட்டாடலின் இந்திய ரீமேக்கான “சிட்டாடல்: ஹனி பன்னி” என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். மயோசிட்டிஸ் நோயிலிருந்து  மீண்டு வந்த சமந்தாவின் முதல் நடிப்பு திட்டம் இதுவாகும்.

இந்நிலையில், மும்பையில் நேற்றைய தினம் இந்த நிகழ்வில் சமந்தாவும், நாக சைதன்யாவும் பங்கேற்றாலும் ஒரே மேடையில் ஒன்றாக காணப்படவில்லை, தனித்தனியாக மேடை ஏறினர். விவாகரத்துக்கு பின், இவர்கள் இருவரும் கலந்து கொள்ளும் முதல் நிகழ்வு இதுவாகும். மேலும் இந்த நிகழ்வில் பிரியங்கா சோப்ரா, ஷாஹித் கபூர், பாபி தியோல், தமன்னா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

READ MORE –  ஜோதிகா நடித்ததால் தான் அந்த படம் தோல்வி! கெளதம் மேனன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

சமந்தாவும் நாக சைதன்யாவும் ஒன்றாக மேடையில் காணப்படவில்லை என்றாலும், நீண்ட நாள் கழித்து ஒரே நிகழ்வில் பங்கேற்றது ரசிகர்களுக்கு ஆசிரியத்தை அளித்தது. ஆனால், இந்த நிகழ்ச்சியில் இருவரும் ஒருவரையொருவர் பேசிக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இது ஒரு பக்கம் இருக்க, அந்த நிகழ்வின் தொகுப்பாளர்ராக வந்த பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளரான கரண் ஜோஹரின் கால்களை மேடையில் சமந்தா தொட முயன்றபோது ‘நோ-நோ’ என்று சொல்லி தள்ளி செல்லும் வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

READ MORE – MGR மனைவி கொடுத்த பரிசு.! மேடையில் உணர்ச்சிவசப்பட்ட கேப்டன் விஜயகாந்த்.!

இந்த நிகழ்ச்சியில் இரட்டை இயக்குனர்களான ராஜ் மற்றும் டிகே இயக்கிய ‘சிட்டாடல்‘ என்ற அதிரடி வெப் தொடரை திரையிட்டனர். மறுபுறம், நாக சைதன்யா நடித்துள்ள வெப் தொடரான ‘தூதா’ கடந்த ஆண்டு அமேசானில் வெளியிடப்பட்டது. இது நல்ல வரவேற்பு பெற்றது, இந்த வெற்றிக்காக நேற்று நடைபெற்ற அந்த விழாவில் பாராட்டுகள் குவிந்தன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 07042025
Waqf Bill Discussion Breaks Record
TN RAIN
True Value Homes - ed
GTvsSRH -IPL2025
Ajith Kumar’s Cut-Out Crashes
csk vs kkr tickets