திமுகவை முந்திய அதிமுக..  எந்தெந்த தொகுதியில் யார் யார் வேட்பாளர்கள்.?  

ADMK Chief Secretary Edappadi palanisamy

ADMK : தமிழகத்தில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கும் நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேட்பு மனுதாக்கல் இன்று முதல் துவங்கி உள்ளது.

Read More – நாடாளுமன்றத் தேர்தல்: 5 தலைப்புகள் கீழ் 25 காங்கிரஸ் வாக்குறுதிகள்.!

தமிழகத்தில் முதற்கட்டத்திலேயே தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால், ஒன்னும் ஒரு மாதத்திற்குள் தேர்தல் என்பதால், தேர்தல் வேலைகளை அரசியல் கட்சிகள் முழுதாக முடிக்கும் முன்னரே வேட்புமனு தாக்கல் செய்யும் நாள் வந்துவிட்டது. தமிழகத்தில் பிரதான கட்சியாக இருக்கும் திமுக, அதிமுக கட்சிகளில் திமுக முதலில் தொகுதி பங்கீடை இறுதி செய்து கூட்டணி கட்சிகளுக்கான தொகுதியை அறிவித்தாலும் திமுக வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ஆனால் தொகுதி இழுபறி கூட்டணி இறுதி செய்யாமல் இருந்து வரும் அதிமுக தற்போது முதல் ஆளாக தங்கள் கட்சி சார்பாக போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இதனை அறிவித்துள்ளார்.  அவர் அறிவித்துள்ளபடி,

  • சென்னை தெற்கு – ஜெயவர்த்தன்.
  • சென்னை வடக்கு – இரா.மனோகர்.
  • காஞ்சிபுரம் – ராஜசேகர்.
  • அரக்கோணம் – ஏ.எல்.விஜயன்.
  • கிருஷ்ணகிரி – ஜெயபிரகாஷ்.
  • ஆரணி – கஜேந்திரன்.
  • விழுப்புரம் – பாக்யராஜ்.
  • சேலம் – விக்னேஷ்.
  • நாமக்கல் – தமிழ்மணி.
  • ஈரோடு – ஆற்றல் அசோக்குமார்.
  • கரூர் – தங்கவேல்.
  • தேனி – நாராயணசாமி.
  • சிதம்பரம் –M.சந்திரகாசன்.
  • நாகப்பட்டினம் – டாக்டர்.G.சுர்ஜித் சங்கர்.
  • மதுரை – டாக்டர்.P.சரவணன்.
  • ராமநாதபுரம் – பா.ஜெயபேருமாள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்