மக்களவை தேர்தல் – இன்று தொடங்குகிறது வேட்புமனு தாக்கல்!

nomination

Lok Sabha Election : நாடு முழுவதும் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 102 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. அதன்படி, தமிழ்நாடு உட்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

Read More – ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு: தமிழர்களுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய அமைச்சர் பேச்சு… மு.க.ஸ்டாலின் கண்டனம்

இதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. அதன்படி, வேட்பாளர்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 27ம் தேதி கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலினை மார்ச் 28ல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

Read More – நாடாளுமன்றத் தேர்தல்: 5 தலைப்புகள் கீழ் 25 காங்கிரஸ் வாக்குறுதிகள்.!

வேட்புமனுக்களை திரும்ப பெற மார்ச் 30ம் தேதி கடைசி நாளாகும். மக்களவை தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டருக்குள் 2 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Read More – ஃபோர்ப்ஸின் உலக பணக்காரர்கள் லிஸ்ட்! பெர்னார்ட் அர்னால்ட் முதல் முகேஷ் அம்பானி வரை..

இதில் குறிப்பாக வேட்புமனு தாக்கல் நடைபெறும் நாட்களில் பிற்பகல் 3 மணிக்கு மேல் தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
UP CM Yogi adityanath
empuraan controversy - kerla hc
Rohit sharma - MS Dhoni
japan megaquake
BJP State president K Annamalai
Heavy rains