இன்றைய ராசி பலன்கள்..! உங்கள் ராசிக்கு இன்று எப்படி இருக்கும்?

horoscope20

Today horoscope-பங்குனி மாதம் ஏழாம் தேதி[ மார்ச் ,2024 ]இன்றைக்கான ராசி பலன்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்:

இன்று நீங்கள் தேவையற்ற எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல் அமைதியாகவும் கவனமுடனும்  செயலாற்ற வேண்டும். உங்கள் துணையுடன்  அனுசரணையான போக்கை மேற்கொள்வது நல்லது. செலவுகள் அதிகமாக ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை, தின்பண்டங்களை தவிர்ப்பது நல்லது.

ரிஷபம்:

இன்று சிறப்பான நாளாக இருக்கும். முடிவுகளை எடுக்க உகந்த நாள். பணியில் வெற்றி கிடைக்கும். உங்கள் துணையுடன் கலகலப்பாக பழகுங்கள். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

மிதுனம்:

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இல்லை, திட்டமிட்டு செயல்படுவது சிறந்த பலனை தரும் .உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும் .பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது .ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

கடகம்:

இன்று ஏற்படும் மன உளைச்சலை தவிர்க்க இசை கேட்பது, திரைப்படம் பார்ப்பது போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம் .பணிச்சுமை அதிகமாக இருக்கும். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும்.  உங்கள் தாயின் உடல் நலத்திற்காக செலவு செய்ய நேரலாம்.

சிம்மம்:

இன்று நீங்கள் தைரியத்துடன் இருக்க வேண்டும், பணிகளை திட்டமிட்டு செய்ய வேண்டும் .உங்கள் துணையுடன் சிறந்த அணுகு முறையை மேற்கொள்ள வேண்டும். பண வரவு குறைந்து காணப்படும். ஆரோக்கிய குறைவு ஏற்படும்.

கன்னி:

இன்று அனைத்து செயல்களும் சுமூகமாக நடக்கும், மகிழ்ச்சி நிறைந்து காணப்படுவீர்கள். உங்கள் மேல் அதிகாரிகளின் அங்கீகாரம் பெறுவீர்கள். உங்கள் துணையுடன் புரிந்துணர்வுடன் இருப்பீர்கள். சிறிய கடன் வாங்க நேரலாம். ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.

துலாம்:

இன்று அனைத்து விதத்திலும் வளர்ச்சி காணப்படும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும் .பணியிடத்தில் புத்துணர்ச்சியுடன் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உங்கள் அன்பான உணர்வுகளை துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். பண வரவு அதிகம் இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்:

இன்று நீங்கள் நம்பிக்கையுடன் இருந்தால் அனைத்து செயல்களும் சிறப்பாக நடக்கும் .பணியிடத்தில் வளர்ச்சி குறைந்து காணப்படும். உங்கள் துணையுடன் நட்பான அணுகு முறையை கொள்ள வேண்டும். நிதி வளர்ச்சிக்கு உகந்த நாள் அல்ல. ஆரோக்கிய குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது.

தனுசு:

இன்று பொழுதுபோக்குகளில் கவனம் செலுத்துவது மனதை அமைதியாக வைத்துக் கொள்ளலாம் .நட்பான அணுகு முறையை அனைவரிடமும் மேற்கொள்ளவும். பணிகளை கவனமாக கையாள வேண்டும். உங்கள் துணையுடன் நகைச்சுவையான உணர்வை வெளிப்படுத்த வேண்டும். பணத்தை கவனமாக கையாள வேண்டும். தூக்கம் குறைவாக இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மகரம்:

இன்று உங்களுக்கு சிறப்பான நாள், பக்தி ஸ்லோகங்கள் படிப்பது நன்மை தரும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் துணையுடன் ஆன உறவில் புரிந்துணர்வு அதிகரிக்கும் .பண வரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது.

கும்பம் :

இன்று நீங்கள் துடிப்புடன் காணப்படுவீர்கள். எதிர்காலம் கருதி எடுக்கும் முடிவுகள் நற்பலனை அளிக்கும் . நீங்கள் குறித்த நேரத்தில் பணிகளை முடிப்பீர்கள், மேல் அதிகாரிகளின் பாராட்டையும் பெறுவீர்கள். உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்குச் செல்லலாம் .பணவரவு திருப்தியை அளிக்கும் .ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மீனம்:

நீங்கள் தகவல் பரிமாற்றத்தின் போது கவனமாக இருக்க வேண்டும் .பணி நிமித்தமாக பயணம் ஏற்படும் .உங்கள் துணையுடன் பேசும் போது கட்டுப்பாடு அவசியம். இன்று பண பற்றாக்குறை காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தியானம் சிறந்த பலனை தரும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்