மன்னர் சார்லஸ் இறக்கவில்லை… இங்கிலாந்து தூதரகம் பரபரப்பு அறிக்கை!

King Charles

King Charles : மன்னர் மூன்றாம் சார்லஸின் மரணம் பற்றிய செய்தி போலியானது என்று உக்ரைனில் உள்ள இங்கிலாந்து தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் (75), புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக கடந்த பக்கிங்காம் அரண்மனை அறிவித்திருந்தது.

அதாவது, கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி இங்கிலாந்து ராணியும், தனது தாயுமான எலிசபெத் ராணி காலமான பிறகு, இங்கிலாந்தின் புதிய மன்னராகப் மூன்றாம் சார்லஸ் பதவியேற்றார். இவர் பதவியேற்று சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில், சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

Read More – ஃபோர்ப்ஸின் உலக பணக்காரர்கள் லிஸ்ட்! பெர்னார்ட் அர்னால்ட் முதல் முகேஷ் அம்பானி வரை..

இதன்பின், அவர் மருத்துவமனையில் புற்றுநோய் பெற்று வருகிறார். இந்த சூழலில், இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் இறந்துவிட்டதாக ரஷ்ய ஊடங்களில் தீயாக ஒரு தகவல் பரவியது. இங்கிலாந்து அரச குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளதாக கூறி, இந்த செய்தியுடன் மன்னர் சார்லஸ் குறித்த புகைப்படமும் இணைக்கப்பட்டிருந்தது.

Read More – 400 தொகுதிகளுக்கு மேல் வெல்வதே இலக்கு… பிரதமர் மோடி உரை!

இது ரஷ்ய ஊடகங்கள் மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் தீயாக பரவியது. அதுமட்டுமில்லாமல், சில பிரபல வெளிநாட்டு செய்தி ஊடகம் ஒன்று, சார்லஸ் மன்னருக்கு இரங்கல் செய்தியும் வெளியிட்டது. இதனால், இந்த தகவலின்படி, மன்னர் மூன்றாம் சார்லஸ் இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் பலரும் பேசி வந்தனர்.

Read More – மேடையில் ஓபிஎஸ்… 57 வருசமா 2 கட்சிகள்.. மாற்றம் வேண்டும்.! அன்புமணி ராமதாஸ்.!

இந்த நிலையில், இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் இறந்துவிட்டதாக பல்வேறு இடங்களில் வெளியான செய்தி போலியானது என்பதை நாங்கள் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம் என்று உக்ரைனில் உள்ள இங்கிலாந்து தூதரகம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்