நாட்டையே உலுக்கிய புதுச்சேரி சிறுமி கொலை! கைதான இருவருக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்
Puducherry: இந்தியாவையே உலுக்கிய புதுச்சேரி சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான இருவருக்கும் மூன்று நாட்கள் போலீஸ் காவல் அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த இரண்டு கொடூரர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Read More – டிஜிபி உட்பட 6 மாநில உள்துறை செயலாளர்களை பதவி நீக்கம் செய்தது தேர்தல் ஆணையம்!
குறித்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டு சாக்கடை கால்வாயில் தூக்கி வீசப்பட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சிறுமி கொல்லப்பட்ட சம்பவத்தில் விவேகானந்தன் (56), கருணாஸ் (19) ஆகியோர் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Read More – SBI-யின் நடவடிக்கையில் திருப்தியில்லை… மீண்டும் உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம்!
போக்சோ வழக்கில் கைதான இருவரிடம் ரத்தமாதிரிகள் மருத்துவக் குழுவினரால் சிறையில் சேகரிக்கப்பட்டன. இந்த நிலையில் சிறுமி வழக்கில் கைதான விவேகானந்தன், கருணாஸ் ஆகிய இருவருக்கும் மூன்று நாட்கள் போலீஸ் காவல் அளித்து தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.