இனிமேல் நடிக்க போறது இல்ல.? சைலண்டாக முடிந்தது ‘குட் நைட்’ நாயகியின் திருமணம்.!
Meetha Raghunath: குட் நைட் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை மீதா ரகுநாத்துக்கு, பெற்றோர் முன்னிலையில் திருமணம் முடிந்தது. தனது நீண்ட நாள் நண்பரை காதலித்து வந்த இவருக்கு, கடந்தாண்டு நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது.
READ MORE – கமல் தடுக்காவிட்டால் சாமியாராக செல்ல துணிந்த ரஜினி.! நடந்தது என்ன?
இந்நிலையில், நேற்று இரு வீட்டார் முன்னிலையில் திரையுலகிற்கு தெரியாமல் சைலண்டாக திருமணம் நடைபெற்றது. நடிகை மீதா ரகுநாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் , திருமணம் முடிந்த புகைப்படங்களை பகிர்ந்து கொண்ட நிலையில், அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், அவரது கணவர் குறித்து தகவல் ஏதும் அவர் குறிப்பிடவில்லை.
READ MORE – அந்த நடிகைக்கு கட்டு கட்டா பணம் கொடுத்த விஜயகாந்த்! காரணம் என்ன தெரியுமா?
முதல் நீ முடிவும் நீ மற்றும் குட் நைட் ஆகிய இரண்டு படங்களில் மட்டும் நடித்திருக்கும் இளம் நடிகையான மீதா ரகுநாத், இனிமேல் சினிமாவில் நடிப்பை தொடர வாய்ப்பு இருப்பதாக கேள்வி எழுந்துள்ளது. அட ஆமாங்க…குட் நைட் படம் மூலம் பலரது மனதை கொள்ளை கொண்ட இவர், இப்போது தான் கேரியரில் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில் அதற்குள் திருமணம் முடிந்துவிட்டது.
READ MORE – நாடோடிகள் படத்திற்கு விழுந்த அடி! இன்னும் கடன் கட்டும் சமுத்திரக்கனி!
இதனால், இவர் இனிமேல் சினிமாவில் நடிப்பை தொடர மாட்டார் என்ற ஒரு தகவல் தீவிரமாக பரவி வருகிறது. அதாவது திரைத்துறையில் பீக்கில் இருந்த நடிகை எல்லாம் திருணம் முடிந்த பின், வெளிநாடு சென்று செட்டில் ஆவதும், சினிமாவில் இருந்து நீண்ட இடைவெளி எடுத்துக்கொள்வதுமாக இருக்கும் நடிகைகள் இங்கு ஏராளம்.
அதுபோல், நடிகை மீதா ரகுநாத் இருக்க போகிறாரா இல்லை நடிப்பை தொடர்வாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம். இவர் குநைட் வற்றிற்கு பின் வேற எந்த திரைப்படங்களிலும் கமிட்டாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை பட வாய்ப்புகள் வரவில்லையா என்று தெரிவில்லை.