இன்றைய தினம் உங்களுக்கு எப்படி இருக்கும்? இன்றைய ராசி பலன்கள்.!

horoscope19

Today horoscope- பங்குனி மாதம் ஆறாம் தேதி[ மார்ச் 19, 2024 ]இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம்.

மேஷம்:

இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும் .பணியில் சக பணியாளர்களால் தொல்லை ஏற்படும், அனுசரித்துச் செல்வது நல்லது. உங்கள் துணையுடன் உணர்வுகளை பகிர்ந்து கொள்வீர்கள். அதிக அளவில் பணம் காணப்படும் .ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்:

இன்று பதட்டமான சூழ்நிலையில் இருப்பீர்கள் ,இசை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்துவது சிறந்தது. உங்கள் பணிகளை திட்டமிட்டு கவனத்துடன் செய்ய வேண்டும். உங்கள் துணையுடன் அமைதியை கடைபிடிப்பது நல்லது .செலவுகள் அதிகமாக காணப்படும். கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

மிதுனம்:

இன்று சிறப்பான நாளாக இருக்காது. எதையும் எளிதாக எடுத்துக் கொள்வது நல்லது. பணியில் சவால்கள் நிறைந்திருக்கும் .உங்கள் துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

கடகம்:

இன்று பொறுப்புகள் அதிகமாக காணப்படும். பிரார்த்தனை மேற்கொள்வதன் மூலம் ஆறுதல் கிடைக்கும் .உங்கள் கடின உழைப்பிற்காக பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் துணையுடன் மனம் திறந்து பேச வேண்டும். இன்று மருத்துவ செலவுகள் ஏற்படலாம் ,ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

சிம்மம்:

இன்று மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள் .உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். பணியில் உங்கள் நேர்மைக்காக மேல் அதிகாரிகள் பாராட்டு கிடைக்கும். உங்கள் துணையுடன் காதலை வெளிப்படுத்துவீர்கள். போதுமான பண வரவு கிடைக்கும். ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.

கன்னி:

கடின உழைப்பின் மூலம் இன்றைய நாளை சிறப்பாக்கிக் கொள்ளலாம். குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க திட்டமிட்டு செயலாற்றுங்கள். உங்கள் குடும்ப முன்னேற்றத்தை பற்றி துணை இடம் விவாதிப்பீர்கள். போதுமான அளவு பணம் காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

துலாம்:

உங்களுடைய அறிவை பயன்படுத்தி இன்றைய நாளை திட்டமிடுங்கள். பொறுமையை கடைப்பிடிப்பது சிறந்தது.  பணிகள் அதிகமாக காணப்படும். உங்கள் துணையுடன் உணர்ச்சிபூர்வமாக நடந்து கொள்வதை தவிர்க்கவும் .அதிக செலவுகள் ஏற்படலாம், உங்கள் தாய்க்கு ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ளது.

விருச்சிகம்:

இன்றைய நாள் சற்று கடினமானதாக இருந்தாலும் நம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். பணியில் மந்த நிலை காணப்படும். உங்கள் துணையிடம் பாதுகாப்பின்மையை உணர்வீர்கள். குடும்ப பெரியவர்களின் ஆரோக்கியத்திற்கு செலவு செய்யலாம். ஆரோக்கிய குறைவு ஏற்படும்.

தனுசு:

இன்று நீங்கள் திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் அற்புதமான நாளாக ஆக்கலாம். உங்கள் புத்திசாலித்தனத்தை நன்கு பயன்படுத்த வேண்டும். உங்கள் பணிகளை தன்னம்பிக்கையுடன் கையாள்வீர்கள் . உங்கள் துணை இடம் நகைச்சுவை உணர்வுடன் பேசுவீர்கள் . நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும் .ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

மகரம்:

இன்று நீங்கள் நேர்மையாக செயல்பட்டால் வெற்றி கிடைக்கும் .உங்கள் பணிகளை முடிப்பதில் சில தடைகள் காணப்படும். உங்கள் துணையுடன் நல் உறவு பராமரிப்பீர்கள். அதிக அளவில் பணம் காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்:

இன்று நீங்கள் தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். பணிகள் இன்று அதிகமாக காணப்படும். உங்கள் துணையுடன் சகஜமான அணுகுமுறை மேற்கொள்ளவும். இன்று பணத்தை கவனமாக கையாள வேண்டும். தாயின் உடல்நிலை பாதிக்கப்படலாம்.

மீனம்:

உங்கள் செயல்களை முன்கூட்டியே திட்டமிட வேண்டியது அவசியம். பணியிடத்தில் உங்கள் திறமைகளை காட்டுவீர்கள். உங்கள் துணை இடத்தில் பதட்டம் அடையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இன்று ஆரோக்கியத்திற்காக செலவினங்கள் ஏற்படலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்