டிஜிபி உட்பட 6 மாநில உள்துறை செயலாளர்களை பதவி நீக்கம் செய்தது தேர்தல் ஆணையம்!

election commission

Election Commission : அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று முன்தினம் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டிருந்தார். அதில், ஏப்ரல் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது எனவும் தெரிவிக்கப்பட்டது.

Read More – மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் தமிழிசை.! ஆளுநர் பதவிகளுக்கு குட்’பை’.!

இந்த நிலையில், குஜராத், உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய 6 மாநிலங்களில் உள்துறை செயலாளர்களும், மிசோரம் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் பொது நிர்வாகத் துறை செயலாளர்களையும் நீக்கம் செய்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் (ECI) உத்தரவிட்டுள்ளது.

Read More – தயவு செய்து கிழே இறங்குங்கள்.. தொண்டர்களிடம் கெஞ்சிய பிரதமர் மோடி.!

இதுபோன்று, மேற்கு வங்க காவல்துறை தலைமை இயக்குநரை (டிஜிபி) ராஜீவ் குமாரை இடமாற்றம் செய்யவும் தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், மும்பை முனிசிபல் கமிஷனர் இக்பால் சிங் சாஹல் மற்றும் கூடுதல் கமிஷனர்கள் மற்றும் துணை கமிஷனர்களையும் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

Read More – SBI-யின் நடவடிக்கையில் திருப்தியில்லை… மீண்டும் உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம்!

தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் 3 ஆண்டுகள் ஒரே தொகுதிக்குள் பணியாற்றியிருந்தால் அல்லது சொந்த மாவட்டங்களில் பணிபுரிந்து வந்தால் அவர்களை, வேறொரு இடங்களில் பணியிடமாற்றம் செய்யுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் தலைமை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுவும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தபின் முதல்முறையாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Pushpa2
TVK Vijay - Union minister Amit shah
chennai rains
OneNation OneElection - Vijay Antony
Savuku Sankar arrested
Sahitya Akademi Award - venkatachalapathy