ஒரே ஒரு படம் தான்! சினிமாவை விட்டே தப்பியோடிய குணா பட நடிகை?

Roshini guna

Roshini சினிமா துறையில் இருக்கும் நடிகைகளில் பலரும் ஒரு படத்தில் நடித்ததன் மூலமே பிரபலமாவது  உண்டு. அப்படி தான் குணா படத்தில் கமல்ஹாசன் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ரோஷினி. குணா படத்தில் நடித்ததன் மூலம் அந்த காலத்தில் இருந்த இளைஞர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார் என்றே சொல்லவேண்டும். அந்த அளவுக்கு குணா படம் இவருக்கு பெரிய வரவேற்பை கொடுத்தது.

read more- கால் அமுக்கிவிட வந்த மூத்த நடிகர்! கேப்டன் விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சி செயல்?

இந்த திரைப்படத்திற்கு பிறகு நடிகை ரோஷினிக்கு பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் வந்து இருக்கிறது. ஆனால், படங்களில் எல்லாம் நடிக்க கமிட் ஆகாமல் சினிமாவை விட்டே விலகி சென்றுவிட்டு நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமாவிற்குள் வந்தார். குணா படத்திற்கு பிறகு அவர் படங்களில் நடிக்காததற்கான காரணத்தை நடிகரும், சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

read more- கமல்ஹாசனை பார்த்தாலே நடுங்கும் பிரபல நடிகை! அப்படி என்ன செஞ்சிட்டாரு உலகநாயகன்?

இது குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன் ” குணா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ரோஷினி. ரோஷினி இந்த நாட்டுப்பெண்மணி இல்லை வடநாட்டு பெண்மணி. பாக்கவே ரொம்ப அழகாக இருப்பார். அதனால் தான் அவருக்கு குணா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ரோஷினி ஒரே ஒரு படம் தான் நடித்தார். குணா தான் அந்த திரைப்படம். குணா படத்தோடு ரோஷினி சினிமாவை விட்டு விலகிவிட்டார்.

read more- கதறி அழுது கால்ஷீட் கேட்ட அறிமுக இயக்குனர்? பீக்கில் இருந்தபோதே யோசிக்காமல் கொடுத்த சரத்குமார்!

நான் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டே சென்றார். அதற்கான காரணமே அவர் திருமணம் செய்து கொண்டது தான். குடும்பத்தை பார்க்கவேண்டும் என்ற காரணத்தால் அவர் சினிமாவை விட்டு சென்றுவிட்டார்” எனவும் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். குணா படம் 1997-ஆம் ஆண்டு வெளியானது. அந்த படத்திற்கு பிறகு 1997 ஆம் ஆண்டு வெளியான சிஷ்யா படத்தில் நடித்து மீண்டும் சினிமாவுக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
Vijay -Parandur -Airport
tn rains
RepublicDayParade - Chennai
Nei vilakku (1)
vishal - vijayantony
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay