பாஜகவை வீழ்த்துவதிலேயே ராகுல் காந்தியின் வெற்றி உள்ளது: மும்பையில் மு.க.ஸ்டாலின் பேச்சு

M.K. Stalin: ராகுல் காந்தியின் “பாரத் ஜோடோ நியாய யாத்திரை” நிறைவு விழாவில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும், இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடனும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரையை 150 நாட்கள் ராகுல் காந்தி  மேற்கொண்டார்.

Read More – மக்களவை தேர்தல்: வேட்பாளர்களின் குற்றப் பின்னணியை அறிவது எப்படி?

பாரத் ஜோடோ நியாய யாத்திரையானது மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இன்று நிறைவடைந்துள்ளது. இதையடுத்து மும்பை சிவாஜி பார்க் மைதானத்தில் யாத்திரையின் நிறைவு விழாவில் ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள கட்சியின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். அதன்படி மு.க ஸ்டாலின், உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிறைவு விழா பொதுகூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பேசும் போது, “”பாஜகவை அகற்றுவதே இந்தியா கூட்டணியின் இலக்கு, நம் கூட்டணியை பார்த்து பிரதமர் அச்சத்தில் உள்ளார். இந்தியாவின் எதிர்கால நம்பிக்கையாக ராகுல் காந்தி இருக்கிறார், பாஜகவை வீழ்த்துவதிலேயே ராகுல்காந்தியின் வெற்றி அடங்கியுள்ளது.

Read More – இரு மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தேதியில் மாற்றம்! தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் செய்த இரண்டு காரியங்கள் என்றால், வெளிநாட்டு பயணம் மற்றும் தவறான பிரச்சாரம் மேற்கொண்டது தான், பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிப்போம். தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவின் ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது” என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்