IPL 2024: சென்னை – பெங்களூர் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
IPL 2024: ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 22-ம் தேதி தொடங்க உள்ளது. தொடரின் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையில் விளையாடும் போட்டிக்கான டிக்கெட்கள் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
Read More – மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற பெங்களூர்! ஆனந்த கண்ணீர் விட்ட ஸ்மிருதி மந்தனா!
கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்கப்படுவதை தடுக்கவே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், சேப்பாக்கத்தில் நடைபெறும் சென்னை – பெங்களூர் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 18-ம் தேதி காலை 9:30 மணிக்கு தொடங்குகிறது. குறைந்தபட்ச டிக்கெட் விலை 1700 ரூபாயாகவும் அதிகபட்ச டிக்கெட் விலை 7500 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
Read More – IPL 2024 : புரூக்கை தொடர்ந்து டெல்லி அணிக்கு அடுத்த சறுக்கல் ..? என்கிடிக்கு பதிலாக இனி இவர் தான் !
PAYTM மற்றும் Insider.in இணையதளம் மூலமாக டிக்கெட்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் தொடர்பான பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது, RO சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீர் வசதி மைதானத்தின் அனைத்து ஸ்டாண்டுகளிலும் ரசிகர்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.