நிவாரணத் தொகை என்பது பிச்சை…ஆன்மீகத்திற்கு எதிரான கட்சி ஆளக் கூடாது – நிர்மலா சீதாராமன்.!
Nirmala Sitharaman: அரசு வழங்கும் நிவாரணத் தொகையை ‘பிச்சை’எனக் குறிப்பிட்டு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விழா ஒன்றில் பேசியுள்ளார்.
சமீபத்தில், பாஜக சார்பில் சென்னையில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ, தாய்மார்களுக்கு ஆயிரம் ரூபாய் பிச்சை போட்டால் அவர்கள் திமுகவுக்கு வாக்களித்து விடுவார்களா.? என குறிப்பிட்டு மகளிர் உரிமைத் தொக திட்டத்தை ‘பிச்சை’ என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார்.
READ MORE – 1000 ரூபாய் பிச்சை சர்ச்சையும்… குஷ்பூ கொடுத்த அதிரடி விளக்கமும்…
இதனை தொடர்ந்து, நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்ற சாணக்யாவின் 5 ஆண்டு விழாவில், டிடிவி தினகரன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் G.K.வாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
READ MORE – தமிழகத்தில் 27 வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு
இந்த விழாவில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பல அரசியல் கருத்துக்களை குறிப்பிட்டு பேசினார். குறிப்பாக அவர் பேசுகையில், “வெள்ளம் வந்தால் ரூ.1000, வீடு இடிந்து விழுந்தால் ரூ.500 எனத் தருகிறார்கள். இத்தகைய நடவடிக்கையால் நாடு முன்னேறாது, எப்போது பார்த்தாலும் இன்னொருவர் போடும் பிச்சையில் நாம வாழத் தேவையில்லை” என அரசு வழங்கும் நிவாரணத் தொகையை ‘பிச்சை’ எனக் குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
READ MORE – எம்.எல்.ஏவாக தொடரும் பொன்முடி..! திருக்கோவிலூருக்கு இடைத்தேர்தல் இல்லை என அறிவிப்பு
இதனை தொடர்ந்து, ஆன்மீகத்திற்கு எதிரான கட்சிகள் ஆளுங்கட்சியாகவோ, எதிர்க்கட்சியாகவோ வந்துவிடக்கூடாது. திராவிட மாடல் ஆட்சியில் தமிழகத்தில் போதைப்பொருட்களின் புழக்கம் அதிகமாகிவிட்டது. போதைப் பொருள் ஆட்சியை இப்படியே விட்டு வைக்கப் போகிறீர்களா? எந்த ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு கெட்ட பெயர் வந்துள்ளதோ அதை அகற்ற வேண்டும் என்று பேசியுள்ளார். இது குறித்து தற்பொழுது சமூக வலைத்தளங்களில் விவாதத்தை எழுப்பியுள்ளது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் தெறி பேச்சு ???????? pic.twitter.com/BocJRUQTsC
— Vij Sriram (மோடியின் குடும்பம்) (@sriramchennai07) March 16, 2024