பிரியாணி ஊரே மணக்க .. மசாலாவை இப்படி ரெடி பண்ணுங்க.. சூப்பரா இருக்கும்..!

biriyani masala

Biriyani masala-பிரியாணி என்ற பெயரைக் கேட்டாலே சிலருக்கு நாவூரும் , அந்த அளவுக்கு பிரியாணி பிரியர்கள் ஏராளம் .பிரியாணிக்கு சுவை கொடுப்பதே  அதில் சேர்க்கும் மசாலா தான். அந்த மசாலாவை எப்படி செய்வது என இப்பதிவில் பார்ப்போம்.

மசாலா பொருட்கள் தேர்ந்தெடுக்கும் முறை:

  • ஏலக்காயை  நாம் வாங்கும் போது அதை உடைத்துப் அதில் ஆறிலிருந்து ஏழு விதைகள் உள்ளதா என பார்த்து வாங்க வேண்டும்.
  • கிராம்பு வாங்கும்போது அது உடையாமலும் அதில் பூவோடும் இருக்குமாறு பார்த்து வாங்க வேண்டும்.
  • பட்டை வாங்கும் போது உடைத்துப் பார்த்தால் ஒரே நிறமாக இருக்க வேண்டும் சில பட்டைகளில் கலர் அடித்தும் விற்பனை செய்யப்படுகிறது. உடைத்து பார்த்தால் மேலே ஒரு கலரும் உள்ளே ஒரு கலரும் தெரியும் அப்படி இருந்தால் அந்தப் பட்டையை வாங்க வேண்டாம்.

தேவையான பொருள்கள்:

  • கிராம்பு =20 கிராம்
  • ஏலக்காய் =30 கிராம்
  • பட்டை =100 கிராம்
  • சர்க்கரை =1 ஸ்பூன்
  • கல் உப்பு =1 ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஏலக்காயை மிக்ஸியில் சேர்த்து ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ளவும், ஏலக்காயை வறுக்க கூடாது. பிறகு பட்டையை நன்கு உடைத்து அதில் ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் கிராம்புகளையும் சேர்த்து நைசாக அரைத்து எடுக்கவும். உப்பு சேர்த்தால் மசாலா நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும். அரைத்த பிறகு பௌடரை  காற்று புகாத பாட்டிலில் அடைத்து வைக்கவும். இதை குளிர்சாதன பெட்டியிலும்  வைக்கலாம் வெளியிலும் வைக்கலாம்.

நாம் செய்து வைத்துள்ள இந்த மசாலா பன்னிரண்டு கிலோ பிரியாணி  செய்யும்போது சேர்த்துக் கொள்ளலாம். அரை கிலோ பிரியாணிக்கு ஒரு ஸ்பூன் இந்த மசாலா சேர்க்கவும் .

ஒரு கிலோ பிரியாணிக்கு இரண்டு ஸ்பூன் மசாலா சேர்த்தால் போதுமானது.  மேலும் கோழி குருமா போன்ற அசைவ குருமாக்கள், குழம்புகள் செய்யும் போதும் இந்த மசாலா பொடியை  சிறிதளவு சேர்த்துக் கொண்டால் மனமும் ருசியும் கூடும்.

ஆகவே நாம் இந்த முறையில் மசாலா அரைத்து வைத்து விட்டால் தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்