மீண்டும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு.! முதல்வர் அதிகாரபூர்வ அறிவிப்பு.!

World Second Tamil Conference in Chennai

செம்மொழி மாநாடு : மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆட்சி காலத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையில் கோயம்புத்தூரில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

Read More – நாளை மும்பை செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

இதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்த தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது வெளியிட்டுள்ளார். இந்த செம்மொழி மாநாடு வரும் ஜனவரி 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

Read More – மாதம் ரூ.1000…புதுமைப்பெண் திட்டத்தை நீட்டித்து அரசாணை வெளியீடு.!

செம்மொழி மாநாடு தொடர்பான அறிக்கையில், “இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” பாவேந்தர் பாரதிதாசன் கூறியதை கமேற்கோள்காட்டி இரண்டாம் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு சென்னையில் வரும் 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 5 நாட்கள் சீரோடும் சிறப்புகளோடும் சிந்தனை செயல் திறனோடும் மாபெரும் அளவில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்