மாதம் ரூ.1000…புதுமைப்பெண் திட்டத்தை நீட்டித்து அரசாணை வெளியீடு.!

Women Scheme - MK STALIN

TN School: தமிழ்நாட்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தில் ரூ.1000 நிதி உதவி வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, “புதுமைப்பெண்” திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் தமிழ்வழியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வந்தது.

READ MORE – நாளை மும்பை செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

தற்பொழுது, அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவிகளுக்கும் உதவித்தொகையை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் இனி அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும். இதனால்,  49,664 மாணவிகள் கூடுதலாக பயன்பெறுவர்பயன்பெறுவார்கள்.

READ MORE – இபிஎஸ் vs ஓபிஎஸ் : இரட்டை இலை சின்னம் யாருக்கு.? இன்று தீர்ப்பு.!

இது தொடர்பாக வெளியான அரசாணையில்,  2024-2025 பட்ஜெட் உரையின் போது, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவிகளுக்கு அடுத்த கல்வியாண்டு முதல் விரிவுபடுத்தப்படும். இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.370 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதி மற்றும் மனித வள மேலாண்மை அமைச்சர் அறிவித்தார்.

READ MORE – சுட்டெரிக்கும் வெயில்… தமிழகத்தில் வழக்கத்தை விட வெப்பநிலை அதிகரிக்கும்.!

இதையடுத்து இத்திட்டம் தற்போது செயல்படுத்தப்படுகிறது என்று குறிப்பிடதக்கது. இந்த திட்டத்தின் மூலம், 2024-25 நிதியாண்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ்வழியில் படிக்கும் மாணவிகளுக்கும் ரூ.35.37 லட்சம் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்