கிளாசிக் விரும்பிகளே ரெடியா? விரைவில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650…வெளியான புதிய தகவல்!
Royal Enfield Classic 650 : ஆட்டோமொபைல் சந்தையில் அப்போ இருந்து இப்போ வரைக்கும் ராயல் என்ஃபீல்டுக்கு பைக்கர்கள் மத்தியில் ஒரு தனி இடம் உள்ளது. அதுவும், ராயல் என்ஃபீல்டு கிளாசிக் மாடல்கள் இந்தியாவிலும், சர்வதேச சந்தையிலும் பிரபலமாக உள்ளது. அந்தவகையில், தற்போது ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகமாக காத்திருக்கும் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 பைக் குறித்து பல்வேறு விஷயங்கள் வெளியாகியுள்ளது.
Read More – 100 பைக் மட்டுமே.. முன்பதிவுக்கு முந்துங்கள்! KTM நிறுவனத்தின் அடுத்த பிரமாண்ட படைப்பு!
அதன்படி, ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 சர்வதேச சந்தையில் சோதனை செய்யப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 வெளிநாட்டில் சோதனை செய்யப்பட்டுள்ளது. கிளாசிக் 650 ஆனது கிளாசிக் 350-இன் வடிவமைப்பில் இருந்து உத்வேகத்தைப் பெறுகிறது. எனவே, புல்லட் 650க்கு முன்பாக கிளாசிக் 650 மாடலை சந்தைக்கு கொண்டு வருவதற்கு ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மும்மரம் காட்டி வருகிறது.
கிளாசிக் 650 விவரங்கள்:
என்ஜின் மற்றும் பவர் அளவு பொறுத்தவரை ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 பைக்கில், Interceptor 650, Continental GT, Super Meteor 650 ஆகியவற்றில் பயன்படுத்திய அதே 648சிசி, ட்வின் சிலிண்டர் ஆயில் கூலிங் வசதியுள்ள என்ஜின், 47BHP பவர், 52NM டார்க் வசதி, 6 ஸ்பீட் கியர் பாக்ஸ், பீஷூட்டர் ஸ்டைல் எக்ஸாஸ்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது.
Read More – முதல் முறையாக புதிய கார் வாங்க போறீங்களா? இதோ உங்களுக்காக மூன்று கார்கள்!
அதாவது, இந்த என்ஜின், 7,250rpm இல் 46.4bhp மற்றும் 5,650rpm இல் 52.3Nm பீக் டார்க்கை உற்பத்தி செய்யும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது. இதன் முன்பக்கம் அதே டெலெஸ்கோபிக் போர்க், பின்பக்கம் ட்வின் ஷாக் வசதி உள்ளது. இரட்டை சேனல் ஏபிஎஸ், ஸ்டீல் சேஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
மேலும், ரோடு-பேஸ்டு டயர்களில் ஸ்போக் வீல்களில் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், எல்இடி ஹெட்லைட்டுடன், கிளாசிக் 650 இரட்டை-பாட் கன்சோலுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விலை:
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 பைக் விலை ரூ. 3.20 லட்சம் முதல் ரூ. 3.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு பிற்பகுதியில் அறிமுகமாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, இந்தியாவில் பிரீமியம் பைக் விற்பனையில் நம்பர் 1 இடத்தில் இருப்பது Royal Enfield தான். அந்த நிறுவனம் 350cc பைக் செக்மென்ட்டில் சுமார் 90% சந்தையை கையில் வைத்துள்ளது.
Read More – சும்மா கெத்தா, ஸ்டைலா இந்தியாவில் என்ட்ரி கொடுக்கு காத்திருக்கும் Honda Africa Twin!
கடந்த மாதம், ராயல் என்ஃபீல்டு ஒட்டுமொத்தமாக 75,935 பைக்குகளை விற்பனை செய்துள்ளது, முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில் விற்பனை செய்யப்பட்ட 71,544 யூனிட்களை விட 6 சதவீதம் அதிகமாகும். எனவே, மொத்த விற்பனையில், உள்நாட்டு விற்பனை எண்ணிக்கை 67,922 யூனிட்டுகளாக (5% அதிகரிப்பு), அதேபோல் ஏற்றுமதி 13 சதவீதம் அதிகரித்து 8,013 யூனிட்டுகளாக இருந்தது.