தேர்தல் பத்திரங்கள்! தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கிடைத்த புதிய முக்கிய தகவல்
Electoral bond: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கிடைத்துள்ள தகவலின்படி எஸ்.பி.ஐ வங்கி மார்ச் 2018 முதல் ரூ.16,518 கோடி மதிப்புள்ள 28,030 தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது. ஆனால் தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்ட பட்டியலில் 12,516 கோடி ரூபாய்க்கு 18,871 பத்திரங்கள் மட்டுமே கணக்கில் காட்டப்பட்டுள்ளது.
Read More – மதுபான கொள்கை முறைகேடு..! முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா கைது
இதன்மூலம், ரூ. 4,002 கோடி மதிப்பிலான 9,159 பத்திரங்கள் பற்றிய தகவல்கள் ஏன் வெளியிடப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. அதன்படி ரூ. 4,002 கோடி மதிப்பிலான பத்திரங்கள் யாருக்கு கொடுக்கப்பட்டன என ஆர்.டி.ஐ ஆர்வலர் கேள்வி எழுப்பியுள்ளார், இதன்மூலம் இந்திய தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்ட பட்டியலில், பத்திரங்கள் குறித்த முழுப் விவரங்கள் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
Read More – பாஜகவின் வங்கி கணக்குகளை முடக்க வேண்டும்… மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை!
முன்னதாக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திரங்கள் முறை செல்லாது என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இந்த வகையில், தேர்தல் பத்திரங்கள் விற்பனை, அவற்றை வாங்கியவர்கள், அவற்றில் எவ்வளவு அரசியல் கட்சிகளால் பணமாக்கப்பட்டன போன்ற விபரங்களை தாக்கல் செய்ய, இந்த திட்டத்தை செயல்படுத்த்தும் எஸ்.பி.ஐ.க்கு உத்தரவிடப்பட்டது, இதன்படி, அனைத்து தகவல்களையும் தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ. வழங்கிய நிலையில் அந்த தகவல்கள் இணையத்தில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.