அப்பல்லோ மருத்துவமனையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் …!
திருமாவளவன் உடல்நிலை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் உடற்சோர்வு, தூக்கமின்மை, நேரத்திற்கு உணவு சாப்பிடாமல் இருப்பதால் உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும், ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் கூறினர்.
இந்நிலையில் அப்பல்லோவில் திருமாவளவன் உடல்நிலை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.