கல்லூரி சேர்த்ததோடு தங்களது கடமை முடிந்து விட்டதா…? நெல்லை டீன் சக்திநாதன் ..!!
நெல்லை ,
நெல்லை அண்ணா பல்கலைக்கழகத்தில் 4 என்ஜினீயரிங் படிப்புகள் உள்ளன. இதில் 225 மாணவ-மாணவிகள் சேர்ந்துள்ளனர். அதேபோல் எம்.பி.ஏ. படிப்பில் 41 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு வகுப்புகள் தொடக்க விழா அண்ணா பல்கலைக்கழக மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது.
அண்ணா பல்கலைக்கழக நெல்லை மண்டல டீன் சக்திநாதன் பேசுகையில், “முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கிறேன். நீங்கள் சிறந்த முறையில் படிக்க வேண்டும். பெற்றோர்களும் மாணவர்களை கண்காணிக்க வேண்டும்.கல்லூரி சேர்த்ததோடு தங்களது கடமை முடிந்து விட்டது என்று நினைக்க கூடாது. மாணவர்களை அடிக்கடி கல்லூரிக்கு வந்து பார்க்க வேண்டும். தங்கள் குழந்தைகள் எப்படி படிக்கிறார்கள் என்று பேராசிரியர்களிடம் கேட்க வேண்டும்” என்றார்.
இவ்விழாவில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வகுப்புகளை தொடங்கி வைத்தார்.மேலும் பல்கலைக்கழக துறை தலைவர்கள் ராஜ்குமார், கவிதா, உஷாகிங்கி, சைலஜ் சற்குணம், வினோலியா, மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்…
DINASUVADU