பாஜகவின் வங்கி கணக்குகளை முடக்க வேண்டும்… மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை!

Mallikarjun Kharge

Mallikarjun Kharge : தேர்தல் பத்திர முறைகேடுகள் அம்பலமாகியுள்ளதால் பாஜகவின் வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை வைத்துள்ளார். சமீபத்தில் தேர்தல் பத்திர முறையை உச்சநீதிமன்ற ரத்து செய்து உத்தரவிட்ட நிலையில், எஸ்பிஐ நேற்று முன்தினம் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை தலைமை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது.

Read More – தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நன்கொடை வாங்கிய டாப் 10 கட்சிகள்… அதிரவைத்த ரிப்போர்ட்.!

இதன்பின், தேர்தல் ஆணையம் அதனை தங்களது அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது. அதில், தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வழங்கிய நிறுவனங்களின் பெயரும், நிதி வாங்கிய கட்சிகளின் பெயரும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்படி, தேர்தல் பத்திரங்களை கொடுத்து பணம் பெற்ற கட்சிகளில் பட்டியலில் பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றன.

Read More – மக்களவை தேர்தல் தேதி… முக்கிய அறிவிப்பு.!

அதில், அதிகமாக பாஜக தான் ரூ.6,060 கோடி நிதி பெற்றிருப்பது தெரியவந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில் பெங்களுருவில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேர்தல் பத்திரம் முறைகேடு அம்பலமாகியுள்ளதால் பாஜகவின் வங்கி கணக்குகளை முடக்க வேண்டும். தேர்தல் பத்திரங்கள் மூலம் எப்படி பாஜக பணம் வசூலித்துள்ளது என்பதை உச்சநீதிமன்றம் அம்பலப்படுத்திவிட்டது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் பல ஆயிரம் கோடியை பாஜக மட்டுமே வசூலித்துள்ளது. மற்ற கட்சிகளுக்கு சொற்ப தொகையே கிடைத்துள்ளது. பெரும் பணத்தின் மூலம் பாஜக தேர்தலை சந்திக்கும்போது, மற்ற கட்சிகளுக்கு எப்படி சம வாய்ப்பு கிடைக்கும். பெரும் நிறுவனங்களுக்கு சலுகை அளித்து தேர்தல் நிதி பெறப்பட்டுள்ளதா என்பதை விசாரிக்க வேண்டும். தேர்தல் பத்திரம் முறைகேடு குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணை முடியும் வரை பாஜகவின் வங்கி கணக்குகளை முடக்கி வைக்க வேண்டும்.

Read More – சீரியல் நம்பர்கள் எங்கே.? SBIக்கு கடும் நெருக்கடி..! உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி.!

மேலும், தேர்தல் பத்திர முறைகேடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்க வேண்டும் என கூறினார். இதனிடையே, பேசிய அவர்,  சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்க பாஜக தான் உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் ரூ.300 கோடி நிதி முடக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலை எப்படி சந்திக்க முடியும்?. தேர்தல் களத்தில் கட்சிகளிடையே சமநிலை எங்கு உள்ளது எனவும் கேள்வி எழுப்பினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்