சில நாட்களுக்கு முன் ‘அந்த’ பெண் என் வீட்டிற்கு வந்தார்.! பாலியல் குற்றசாட்டுக்கு எடியூரப்பா பதில்.
Yediyurappa : கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும், பாஜகாவின் மூத்த தலைவருமான பிஎஸ். எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. பாதிப்படைந்த 17-வயது சிறுமியின் தாய் பாலியல் தொல்லை கொடுத்ததாக அளித்த புகாரின் கீழ் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
Read More :- கர்நாடகாவில் பரபரப்பு.!17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.? எடியூரப்பா மீது போக்சோ வழக்கு.!
கடந்த பிப்ரவரி-2 ம் தேதி, பெங்களூரை சேர்ந்த 17-வயது சிறுமி கல்வியின் உதவிக்காக தனது தாயாருடன் எடியூரப்பா வீட்டிற்கு சென்றுள்ளார் அங்கு அந்த சிறுமிக்கு, எடியூரப்பா பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார். தற்போது, இந்த சம்பவத்தை குறித்து பிஎஸ். எடியூரப்பா கர்நாடகா பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், ” சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண் எனது வீட்டிற்கு வந்தார்.
Read More :- முகத்தில் வழிந்த ரத்தம்.. பதறிய தலைவர்கள்.. பத்திரமாக வீடு திரும்பிய மம்தா.!
அந்த பெண் என்னிடம் அவளது தனிப்பட்ட பிரச்சனையை கூறி அழுது கொண்டிருந்தாள். நான் அந்த பெண்ணனிடம் என்ன விஷயம் என்று கேட்டேன். அந்த விஷயத்தை பெண் கூறியதும் தனிப்பட்ட முறையில் நான் போலீஸ் கமிஷனரை அழைத்து அந்த பெண்ணுக்கு உதவ சொன்னேன். பின்னர் அந்த பெண் தற்போது எனக்கு எதிராக வழக்கு தொடுத்து இருக்கிறாள். நேற்று போலீசார் என் மீது புகார் பதிவு செய்துள்ளனர்.
Read More :- தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நன்கொடை வாங்கிய டாப் 10 கட்சிகள்… அதிரவைத்த ரிப்போர்ட்.!
இதை தொடர்ந்து அடுத்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம். இதற்கு பின்னாடி அரசியல் உள்நோக்கம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. என் மீது எழுந்துள்ள இந்த குற்றச்சாட்டை நான் சட்டரீதியாக எதிர்கொள்வேன். மேலும், புகார் அளித்துள்ள அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.” , என்று கர்நாடக பத்திரிக்கையாளர்களிடம் இந்த சம்பவம் குறித்து பதிலளித்திரிக்கிறார்.
Bengaluru | On charges of sexual assault against him, former Karnataka CM BS Yediyurappa says, “A few days ago a woman came to my house. She was crying saying that there was some problem. I asked her what was the matter and I personally called the police commissioner about the… pic.twitter.com/6lhf2lXkeQ
— ANI (@ANI) March 15, 2024