இன்றுடன் சேவையை முடித்து கொள்கிறது PayTM.. இருந்தும் பணப்பரிவர்த்தனை செய்யலாம்…

Paytm

PayTM : ரிசர்வ் வங்கி உத்தரவின்படி, Paytm பேமெண்ட் வங்கி தனது செயல்பாடுகளை முற்றிலுமாக இன்றுடன் நிறுத்த கொள்கிறது. அதாவது, கடந்த பிப்ரவரி 29ம் தேதிக்கு பிறகு Paytm பேமெண்ட் வங்கி தனது செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் உத்தரவிடப்பட்ட நிலையில், பின்னர் இன்று வரை அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி, தற்போது Paytm பேமெண்ட் வங்கி தனது செயல்பாடுகளை இன்று முடித்து கொள்கிறது.

Read More – ஸ்மார்ட் வாட்ச் டிசைனை மாற்ற போகும் சாம்சங் கேலக்சி ..! ஆப்பிளுடன் போட்டியா .?

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் முக்கிய அங்கம் வகித்த பேடிஎம் பேமென்ட் வங்கி, கே.ஒய்.சி எனப்படும் வாடிக்கையாளர் விவர குறைபாடுகள் மற்றும் தொடர் விதிமீறல்களில் ஈடுபட்டு வந்தததன் காரணமாக அதன் செயல்பாடுகளை முற்றிலுமாக நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது.

Read More – போனிலே பக்கவா எடிட் பண்ணனுமா? உங்களுக்கான தரமான 3 ஆப்ஸ் இதோ!

அதன்படி, முதலில் பிப்ரவரி 29-க்குள் பேடிஎம் பேமென்ட் வங்கி, தனது பணப்பரிவர்த்தனையை நிறுத்த உத்தரவிட்ட நிலையில், பின்னர் இன்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. அதுபோன்று, வாடிக்கையாளர்களிடம் வாலட்களில் பணம் பெறுவதோ, என்.சி.எம்.சி. கார்டு மூலம் பணம் பெறுவதோ, வாடிக்கையாளர் சேமிப்பு வங்கிக் கணக்கு, நடப்பு கணக்கு, ஃபாஸ்ட்டேக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்கவோ தடை விதிக்கப்பட்டது.

Read More – உலகின் முதல் AI மென்பொருள் என்ஜினீயர் “Devin” அறிமுகம்… சிறப்பசங்கள் என்ன?

மேலும்,  Paytm பேமெண்ட் வங்கிக்கு ரூ. 5.49 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) விதிமுறைகளை மீறியதற்காக இந்த நடவடிக்கையை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ரிசர்வ் வங்கி உத்தரவின் படி, இன்று முதல் பேடிஎம் பேமென்ட் வங்கி சேவைகள் செயல்படாது. இருப்பினும், gpay, phone pay போன்று paytm வேலை செய்யும் என்றும் பணப்பரிவர்த்தனை செய்யலாம் எனவும் கூறப்படுகிறது.

இதனிடையே, இன்றுடன் Paytm வங்கி சேவை முடிவுக்கு வந்ததால், அந்நிறுவன FasTag வைத்திருப்போர் வேறு வங்கிக்கு மாற தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வலியுறுத்தி இருந்தது. இதுபோன்று, பங்கு வர்த்தகத்திற்கான வங்கி கணக்கையும் Paytm-இல் இருந்து மாற்றி கொள்ள மும்பை பங்குச்சந்தை அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்