மக்களவை தேர்தல்… விவசாயிகளுக்கான வாக்குறுதிகளை அள்ளி வீசிய காங்கிரஸ்..!
congress : நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு, கடன் தள்ளுபடி, MSP சட்டம், பயிர்க் காப்பீடு என விவசாயிகளுக்கான பல்வேறு வாக்குறுதிகளை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அள்ளி வீசியுள்ளார். இதற்கு முன்பு இளைஞர்களுக்கு, பெண்களுக்கு என தனித்தனியே வாக்குறுதிகளை அளித்த நிலையில், இன்று விவசாயிகளுக்கான பல்வேறு வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
Read More – இவர்கள் தான் புதிய தேர்தல் ஆணையர்கள்… ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடும் குற்றச்சாட்டு!
மகாராஷ்டிராவில் பாரத் ஜோடோ நியாய யாத்ரா மேற்கொண்டு வரும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, விவசாயிகளுக்கான வாக்குறுதிகளை அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, எதிர்க்கட்சியான இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், விவசாயிகளின் கடன் தள்ளுபடி, பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) உத்தரவாதம், பயிர்களுக்கு சரியான விலை கிடைக்கும் என தெரிவித்தார்.
Read More – ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது சாத்தியம்.! குடியரசு தலைவரிடம் அறிக்கை தாக்கல்.!
பயிர்க் காப்பீட்டுத் திட்டங்களையும், சரக்கு மற்றும் சேவை வரியையும் (ஜிஎஸ்டி) முறையாகச் செயல்படுத்தப்படும் என விவசாயிகளுக்கு உறுதியளித்தார். தற்போது விவசாயிகளின் பயிர்களுக்கு உரிய விலையும், பயிர் இழப்பு ஏற்பட்டால் காப்பீட்டுத் தொகையும் கிடைப்பதில்லை, மேலும், ஜிஎஸ்டி வரியும் விவசாயிகள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
Read More – குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யும் அதிகாரம் எந்த மாநில அரசுக்கும் இல்லை.. அமித்ஷா அதிரடி.!
இதனால் நாட்டின் விவசாயிகள் எல்லா பக்கங்களிலிருந்தும் சூழப்பட்டுள்ளனர். தற்போதைய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளின் அவலநிலையை புரிந்துகொள்ளலாம், அவர்களின் கடின உழைப்புக்கு மதிப்பளிக்காமல் இருக்கிறது. ஆனால், காங்கிரஸ் அரசு எப்போது, ஆட்சிக்கு வந்தாலும் விவசாயிகளின் பிரச்சனைகளை ஏற்றுக் கொள்ளும். விவசாயிகளுக்காக காங்கிரஸ் அரசின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். டெல்லியில் விவசாயிகளின் குரலுக்கு செவிசாய்க்கும் அரசாக இருக்கும் என்றார்.
விவசாயிகளுக்கான காங்கிரஸின் வாக்குறுதிகள் :
- விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்கும் வகையில் சட்டம் இயற்றப்படும்.
- விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு, ஜிஎஸ்டியில் இருந்து வரி விலக்கு அளிக்கப்படும்.
- விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க நிரந்தர ஆணையம் அமைக்கப்படும்.
- பயிர் பாதிப்பு ஏற்பட்டால் 30 நாட்களுக்குள் இழப்பீடு வழங்கப்படும் என்றும் வேளாண் பொருள்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கொள்கை உருவாக்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது.