AMOLED டிஸ்ப்ளே…108MP ரியர் கேமரா… மலிவு விலையில் அறிமுகமான POCO X6 Neo!
POCO X6 Neo : முன்னணி நிறுவனமான போகோ (POCO), பட்ஜெட் பிரண்டலி, அதாவது மலிவு விலையில் சிறப்பான அம்சங்களுடன் கூடிய தனது புதிய படைப்பான POCO X6 Neo ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. POCO X6 Neo ஸ்மார்ட்போன் என்பது அதன் X சீரிஸ் டிஎன்ஏவை சேர்ந்தவையாகும். POCO X6 சீரிஸ் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில், POCO X6 நியோவிற்கும் எதிர்பார்ப்பு எகிறியிருந்தது.
Read More – இந்தியாவில் லாஞ்ச் ஆனது iQOO Z9 5G ! விலை எவ்வளவு தெரியுமா ?
POCO X6 நியோ டிஸ்பிளே :
POCO X6 நியோ ஸ்மார்ட்போன் ஸ்லிம்மாக உருவாக்கப்பட்டுள்ளது. வெறும் 175 கிராம் எடையும், கையில் பிடிப்பதற்கு இலகுவாக 7.69 மிமீ தடிமன் அளவையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 1080 x 2400 பிக்சல்கள் கொண்ட 6.67-இன்ச் முழு HD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 120Hz ரெப்ரெஷ் ரேட்டுடன் வருகிறது.
கேமரா :
இதுபோன்று, 2160Hz உடனடி தொடு மாதிரி விகிதத்தைக் கொண்டுள்ள இந்த மொபைலானது கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பயன்படுத்தப்பட்டுள்ளது. கேமராவை பொறுத்தவரை Poco X6 Neo-ஆனது 108MP முதன்மை சென்சார் மற்றும் 2MP டெப்த் சென்சார் கொண்ட போகோ பிராண்டிங் உடன் டூயல் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 16MP பிரண்ட் கேமராவை கொண்டுள்ளது.
Read More – இனி LLR எடுப்பது மிக சுலபம்… தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு.!
Poco X6 நியோ அம்சங்கள் :
- மீடியா டெக் டைமன்சிட்டி 6080 சிப்செட் மூலம் இயக்கப்படும் இந்த மொபைலானது, அனைத்து கிராபிக்ஸ் பணிகளுக்கும் மாலி ஜி57 எம்சி2 ஜிபியுவுடன் (Mali G57 MC2 GPU ) இணைக்கப்பட்டுள்ளது.
- Android 14 இயங்குதளத்தின் அடிப்படையில் MIUI 14 மூலம் இயக்கப்படுகிறது.
- இதில், 12GB LPDDR4X ரேம் மற்றும் 256GB ரோம் UFS 2.2 வரை வருகிறது. அதுமட்டுமில்லாமல் microSD கார்டு ஸ்லாட் வழியாக 1TB வரை பயன்படுத்திக்கொள்ளலாம்.
- மேலும், மொபைல் சைடு புறத்தில் கைரேகை ஸ்கேனர், 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக், 5G சப்போர்ட், டால்பி அட்மாஸ் சப்போர்ட் மற்றும் ஸ்பிளாஸ் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ்க்கான IP54 ரேட்டிங் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
- 5,000mAh என்ற பெரிய பேட்டரியை கொண்டுள்ள Poco X6 Neo 33W பாஸ்ட் சார்ஜர் சப்போர்ட்டும் கொண்டுள்ளது.
Poco X6 நியோ விலை :
இந்திய சந்தையில் Poco X6 Neo 8ஜிபி ரேம்/128ஜிபி ரோமின் விலை ரூ. 14,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் 12ஜிபி ரேம்/256ஜிபி ரோமின் விலை ரூ.16,999 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் மேலும் சலுகைகளை பெற விரும்பினால், ஐசிஐசிஐ கார்டு மூலம் பணம் செலுத்தினால் ரூ.1,000 தள்ளுபடி செய்யப்படும்.
Read More – தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் செய்தி.. 4000 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!
Poco X6 Neo ஸ்மார்ட்போன் Astral Black, Horizon Blue மற்றும் Martian Orange உள்ளிட்ட மூன்று நிறங்களில் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட்டில் இருந்து வாங்கலாம். ஸ்மார்ட்போனின் வழக்கமான விற்பனை மார்ச் 18 முதல் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.