அண்ண அது நமக்கு ரொம்ப முக்கியம்! இயக்குனருக்கு சிவகார்த்திகேயன் போட்ட கண்டிஷன்?
Sivakarthikeyan நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அமரன் படத்தில் நடித்து முடித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய 23-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் குட் நைட் படத்தை இயக்கிய விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
READ MORE – ஒரு வழியா குறைச்சிட்டாங்க போல! பழைய லுக்கில் அனுஷ்கா! குவிய போகும் பட வாய்ப்புகள்?
இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் அவர் நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஆனால், குட் நைட் படம் வெளியான சமயத்திலேயே இயக்குனரை நேரில் அழைத்து படத்தை பாராட்டிவிட்டு நமக்கும் இதைப்போல ஒரு பீல் குட்டான திரைப்படம் வேண்டும் கதை தயார் செய்ய சொல்லி கூறியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
READ MORE – எம்மாடி திருமணம் மட்டுமே வேண்டவே வேண்டாம்! அலறும் நடிகை ஆண்ட்ரியா!
அந்த தகவலை தொடர்ந்து அந்த படம் பற்றிய புதிய தகவல் ஒன்றும் வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், இந்த படத்தின் கதை எழுதும் பணி எந்த அளவிற்கு போய் கொண்டுஇருக்கிறது என விநாயக் சந்திரசேகரனிடம் கால் செய்து சிவகார்த்திகேயன் விசாரித்தாராம். விசாரித்த போது நமக்கு ராவாக எல்லாம் எழுதவேண்டாம் என்று முதல் கண்டிஷன் போட்டாராம்.
read more- விஜயகாந்தை கோபப்படுத்திய ரவுடிகள்! படப்பிடிப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்?
அதைப்போல அண்ணா நமக்கு நடனம் ஆட பாடல்கள் வேண்டும் எனவே பாடல்கள் இருப்பது போல எழுதுங்கள் என்றும் கூறி கண்டிஷன் போட்டுள்ளாராம். சிவகார்த்திகேயன் கேட்டபடியே அவரும் தற்போது கதையை எழுதிக்கொண்டு வருகிறாராம். கதை எழுதி முழுவதுமாக முடித்த பிறகு தான் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.