மரவள்ளிக்கிழங்க இப்படி சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்தாம்.!

tapioca

Tapioca -மரவள்ளி கிழங்கில் எந்த அளவிற்கு நன்மைகள் உள்ளதோ அதே அளவுக்கு உயிருக்கே ஆபத்து தரக்கூடிய தீங்கும் உள்ளது. அது பற்றி அதைப்பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

மரவள்ளி கிழங்கின் பயன்கள்:

  • கேரளாவில் அரிசி தட்டுப்பாடு இருந்தபோது மரவள்ளி கிழங்கு என்று சொல்லக்கூடிய கப்பக்கிழங்கு தான் முக்கிய உணவாக திகழ்ந்தது.மரவள்ளி கிழங்கிலிருந்து தான் ஜவ்வரிசி தயாரிக்கப்படுகிறது.
  • அது மட்டுமல்லாமல் பல மருந்து தொழிற்சாலைகளிலும் இதன் பயன்பாடு உள்ளது. குறிப்பாக குளுக்கோஸ் தயாரிப்பில் இதன் பங்கும் உள்ளது. இதில் அதிக அளவு ஸ்டார்ச் உள்ளதால் உடனடியாக ஆற்றலை தரக்கூடியது.
  • மேலும் இதன் மாவு காகித தொழிற்சாலைகள், ஜவுளி தொழிற்சாலைகளில் துணிகளை கஞ்சி போடுவதற்கும், சணல் ஆலைகள், அட்டை பெட்டி ஆலை  போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது.

மரவள்ளி கிழங்கின் நன்மைகள்:

  • மரவள்ளி கிழங்கை  வேக வைத்து தான் எடுத்துக் கொள்ள வேண்டும், அப்படி எடுத்துக் கொள்ளும் போது அதில் உள்ள விட்டமின் ஏ கண் பார்வை குறைபாடு வராமல் பாதுகாக்கும். மேலும் குடல் இயக்கம் சீராக இயங்கச் செய்யும்.
  • இதில் அதிகப்படியாக விட்டமின் கே உள்ளது, எலும்புகளை வலுவூட்ட சிறந்த ஆகாரமாகும் .மாதவிடாய் காலங்களில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டால் கட்டுக்குள் வைக்கும்.
  • உடல் எடை கூட நினைப்பவர்கள் மரவள்ளி கிழங்கை அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்ளலாம். வயிற்றுப்போக்கை உடனடியாக நிறுத்தும் தன்மையையும் கொண்டுள்ளது.

தவிர்க்க வேண்டியவர்கள்:

கல்லீரல் பிரச்சனை, சிறுநீரகப் பிரச்சனை, மற்றும் பக்கவாதம்,அலர்ஜி உள்ளவர்கள் இந்த  கிழங்கை எடுத்துக்கொள்ள கூடாது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை கேட்டு எடுத்துக் கொள்ளவும்.

இதில் இயற்கையாகவே சயனைடு உள்ளதால் சில தீங்கை விளைவிக்க  கூடியது தான். இந்தக் கிழங்கை  பச்சையாக உட்கொள்ளுவதை தவிர்க்கவும் ,ஏனென்றால் தைராய்டு மற்றும் கைகால் உணர்வில்லாமல் செய்யும்,நடையில் தடுமாற்றத்தையும் உண்டுபண்ணும் .

மரவள்ளிக் கிழங்குடன் சேரக்கூடாத உணவுகள்:

மரவள்ளி கிழங்கு எடுத்துக்கொண்ட பிறகு இஞ்சி மற்றும் சுக்கை எடுத்துக் கொள்ளக் கூடாது ,இது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும். மேலும் மரவள்ளி கிழங்கில் கருப்பு நிற கோடுகள், புள்ளிகள் இருந்தால் அதை கண்டிப்பாக சாப்பிடக்கூடாது இது உயிருக்கே ஆபத்தில் போய் முடிந்து விடும்.

எனவே மரவள்ளிக்கிழங்கை முறையாக நாம் வேகவைத்து அவ்வப்போது உணவில் எடுத்துக் கொள்ளலாம் . மைதாவில் தயாரிக்கப்பட்ட உணவுகளை விட மரவள்ளி கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் உணவுகள் மேலானவை தான். ஆகவே மரவள்ளிக்கிழங்கை அடிக்கடி நாம் வேகவைத்து எடுத்துக்கொண்டு அதன் பலன்களை பெறலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்