பள்ளிகளுக்கு விடுமுறை.? வாகனங்களை பிடுங்கும் திமுக.? அண்ணாமலை காட்டம்.!

K Annamalai BJP State President

Annamalai :  இன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்த விழாவில் 57,325 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மேலும், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து ரூ.1273.51 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

Read More – வாட்ஸ் அப் யுனிவர்சிட்டி மூலம் பொய் பிரச்சாரம்… முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

கோவையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுநிகழ்வில் கலந்து கொள்வதால் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதாகவும், தனியார் பள்ளி பேருந்துகள் அந்த நிகழ்வுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று பொள்ளாச்சி வந்திருப்பதால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தனியார் பள்ளிகளில் இருந்தும், பள்ளி வாகனங்களை, முதலமைச்சர் வருகைக்காகப் பயன்படுத்த வற்புறுத்திப் பெற்றுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.திமுக அரசின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தால், மாணவர்கள் பள்ளிக்கு வர போதுமான வாகனங்கள் இல்லாமல், பல பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

Read More – இனி ராணுவ வீரர்கள் வரி செலுத்த வேண்டாம்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!

பள்ளியிறுதிப் பொதுத்தேர்வுகள் நடைபெறும் இந்த நேரத்தில், தங்கள் விளம்பர அரசியலுக்காக, மாணவர்கள் பயணம் செய்யும் பள்ளி வாகனங்களைப் பிடுங்கிக் கொள்ளும் உரிமையை, திமுக அரசுக்கு யார் கொடுத்தது? மாவட்ட ஆட்சியர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள், திமுகவின் இது போன்ற அதிகார துஷ்பிரயோகத்துக்குத் துணை செல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

Read More – பாஜக தலைமையில் ‘மெகா’ கூட்டணி.! அமமுக, ஓபிஎஸ் அணிக்கு ஒற்றை இலக்க தொகுதிகள்.?

ஒருபுறம், போதைப்பொருள்கள் விற்பனையைக் கட்டுப்படுத்தத் தவறி, தமிழக இளைஞர்கள் வாழ்க்கையைப் பாழாக்கிக் கொண்டிருக்கும் வேளையில், பள்ளி மாணவர்களுக்கான, பொதுத் தேர்வுகள் நடைபெறும் நேரத்தில், தங்கள் அரசியலுக்காக பள்ளி வாகனங்களை முறைகேடாக கட்டாயப்படுத்தி வாங்குவது, அராஜகத்தின் உச்சம் என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என தனது காட்டமான கண்டன பதிவை குறிப்பிட்டுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்