மக்களவை தேர்தல்..! 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
Congress: மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி 43 தொகுதிகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 8ஆம் தேதி காங்கிரஸ் கட்சி 39 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை அறிவித்தது.
Read More – தேர்தல் பத்திரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளித்தது SBI வங்கி!
அப்போது சத்தீஷ்கர், கர்நாடகா, கேரளா, மேகாலயா, சிக்கிம், தெலங்கானா, திரிபுரா, லட்சத்தீவு ஆகிய மாநிலங்களுக்கான பட்டியல் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால், மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளார்.
43 வேட்பாளர்களை கொண்ட இரண்டாம் கட்ட பட்டியலில் மத்திய பிரதேசம், அசாம், ராஜஸ்தான், குஜராத், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கான தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. நேற்று பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த ராகுல் கஸ்வான் ராஜஸ்தான் மாநிலத்தில் சுரு தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More – ஆதார் அட்டையை புதுப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு! வெளியான முக்கிய அறிவிப்பு
மேலும், கமல்நாத்தின் மகன் நக்ல்நாத் மத்தியப்பிரதேசத்தின் சிந்திவாரா தொகுதியில் போட்டியிட உள்ளார். அசாம் மாநிலம் ஜோர்கட் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக கவுரவ் கோகோய் அறிவிக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் ஜலோர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த ராகுல் கஸ்வான் மீண்டும் சுரு தொகுதியில் போட்டியிட உள்ளார். #Congress #BJP #LokSabhaElection2024 pic.twitter.com/BZXgAkgeaB
— Idam valam (@Idam_valam) March 12, 2024