அரசு ஊழியர்களுக்கு இன்பச்செய்தி! அகவிலைப்படியை 4% உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

dearness allowance

MK Stalin : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் மூலம் தற்போது 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 50 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.  அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை பரிசீலித்து அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

Read More – தமிழகத்தில் சி.ஏ.ஏ சட்டம் அமல்படுத்தப்படாது.! முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு  வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையே அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிதி நிலைமைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றுவதில் இந்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

Read More – சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தார் தலைவர் சரத்குமார்.!

அந்தவகையில் மத்திய அரசுப் பணியாளர்களுக்கு 01.01.2024 முதல் 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 50 சதவீதமாக உயர்த்தி வழங்கிட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதேபோன்று மாநில அரசு பணியாளர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி 50 சதவீதமாக 01.01.2024 முதல் உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

Read More – தமிழக போலீஸ் கும்பகர்ணன் போல தூங்குகிறார்கள்… இபிஎஸ் கடும் குற்றசாட்டு.!

இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் தமிழக அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூ.2587.91 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்