குடியுரிமை பெற புதிய இணையதளம்… அறிமுகம் செய்தது மத்திய அரசு!

CAAOnlinePortal

Indian citizenship : இந்திய குடியுரிமை கோரும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் அகதிகளுக்காக பிரத்யேக இணையதளத்தை மத்திய அரசு (MHA) அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (CAA) பெரும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அதனை பொருட்படுத்தாமல் அந்த சட்டத்தை அமல்படுத்தப்படுவதாக நேற்று மத்திய அரசு அறிவித்தது.

Read More – ஹரியானா அரசியலில் திடீர் திருப்பம்… முதல்வர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா!

மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கண்டங்களை தெரிவித்து போராட்டங்களில் இறங்கியுள்ளனர். ஒன்றுபட்டு இருக்கும் இந்தியாவை சிஏஏ சட்டம் மூலம் மதம் ரீதியாக பிளவுபடுத்த மத்திய பாஜக அரசு இவ்வாறு செயல்படுகிறது என்றும் 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தேர்தல் நேரத்தில் சட்டத்தை அமல்படுத்துவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கின்றனர்.

இந்த சட்டம் மூலம் 2014 டிசம்பர் 31 அல்லது அதற்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது.

Read More – குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) என்றால் என்ன? இச்சட்டத்திற்கு எதிர்ப்பு இருப்பது ஏன்? விரிவான தகவல்

இந்த நிலையில், இந்திய குடியுரிமை கோரும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பெளத்தர்கள், பார்சிகள் மற்றும் கிருஸ்துவர்களுக்கான பிரத்யேக இணையதளத்தை மத்திய அரசு (MHA) அறிமுகப்படுத்தியுள்ளது.

Read More – குடியுரிமை சட்டத்திருத்த சட்டம் அமல்.! அசாமில் வலுக்கும் மாணவர்கள் போராட்டம்.!

அதாவது, குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை பெற விண்ணப்பிக்க புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, http://indiancitizenshiponline.nic.in என்ற இணையதளத்தில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்திய குடியுரிமை பெற சிறப்பு மொபைல் செயலியையும் விரைவில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எனவே நாடு முழுவதும் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் சிஏஏ சட்டத்துக்கான புதிய போர்ட்டலை மத்திய அரசு அறிமுகம் செய்திருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்