இந்த வருஷம் தமிழ் சினிமா என்னோட கண்ட்ரோல்! முரட்டு சம்பவத்திற்கு தயாரான சிவகார்த்திகேயன்!
Sivakarthikeyan ஒரு ஹீரோவுக்கு ஒரு ஆண்டில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படம் ஹிட் ஆகி விட்டால் அடுத்ததாக பட வாய்ப்புகள் குவியும் அதைப்போல மார்க்கெட்டும் எங்கயோ சென்றுவிடும். அந்த வகையில், சிவகார்த்திகேயனின் மார்க்கெட் இந்த ஆண்டு எங்கயோ செல்ல போகிறது என்று கூறப்படுகிறது. ஏனென்றால், சிவகார்த்திகேயனுக்கு இந்த ஆண்டு அயலான் படத்தை சேர்த்து 3 திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகிறதாம்.
READ MORE – தனுஷ் மட்டும் அதை பண்ணலனா ‘அனிருத் அவ்வளவுதான்’…ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓபன் டாக்!
ஏற்கனவே அயலான் திரைப்படம் வெளியாகி மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து இந்த ஆண்டே சிவகார்த்திகேயனுக்கு இரண்டு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாம். அது என்னென்ன திரைப்படங்கள் என்பதனை பார்க்கலாம்.
அமரன்
இயக்குனர் ராஜ்குமார் பெரிய சாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்து இருக்கும் திரைப்படம் தான் அமரன். இந்த திரைப்படத்தினை நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. படத்தை ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Read More- பட்ஜெட்டை தாண்டி சென்ற ‘அமரன்’! பணத்தை அள்ள கமல்ஹாசன் போட்ட பக்கா பிளான்!
SK23
அமரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தனது 23-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. படத்திற்கு தற்காலிகமாக sk23 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தினை இந்த ஆண்டு இறுதி டிசம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Read More- ரொம்ப திமிரு! விஜயகாந்த் அண்ணனுக்கு துரோகம் பண்ணிட்டேன்…பிரபல தயாரிப்பாளர் கண்ணீர்!!
எனவே, அயலான் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு 2 திரைப்படம் வெளியாகவுள்ளது அவருடைய ரசிகர்களு இன்ப செய்தியாக அமைந்துள்ளது. அமரன் படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தது. அதைப்போல ஏ.ஆர்.முருகதாஸ் அவரை வைத்து இயக்கும் படத்தின் மீதும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இதனை வைத்து பார்க்கையில் கண்டிப்பாக இந்த இரண்டு படங்கள் இந்த ஆண்டு வெளியாகி வெற்றி அடைந்தால் கண்டிப்பாக சிவகார்த்திகேயனின் மார்க்கெட் எங்கையோ சென்றுவிடும் என்றே கூறலாம்.