புதிய தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது

Jyothi Nirmalasamy: தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

Read More – ஆபாச படங்கள் பார்ப்பது குறித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

தேர்தல் ஆணையராக இருந்த பழனிகுமார் வயது மூப்பு காரணமாக ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்றதையடுத்து பத்திரப் பதிவுத்துறை செயலாளராக இருந்த ஜோதி நிர்மலாசாமி புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமியை நியமித்து அரசிதழில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாநிலத் தேர்தல் ஆணைய அமைப்பு திருத்தச் செயல் சட்டத்தின் கீழ் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல்கள் இவரது தலைமையில் தான் நடைபெறும்.

Read More – பள்ளிக்கல்வி துறையின் பேஸ்புக் பக்கம் ஹேக்.! சினிமா காட்சிகளை பதிவேற்றிய விஷமிகள்

அதன்படி, தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராம ஊராட்சி தேர்தல்கள் நடைத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்