வெளியீடு தேதி உறுதி… பக்காவான அம்சங்களுடன் இந்தியாவுக்கு வருகிறது Realme Narzo 70 Pro 5G!
Realme Narzo 70 Pro 5G : Realme நிறுவனம் தனது அடுத்த மாடலான Realme Narzo 70 Pro 5G ஸ்மார்ட்போன் வெளியாகும் தேதியை உறுதி செய்துள்ளது. அதன்படி, பல்வேறு பக்காவான அம்சங்களை கொண்ட Realme Narzo 70 Pro 5G ஸ்மார்ட்போன் மார்ச் 19ம் தேதி மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, Realme தனது நார்சோ சீரியஸின் மூன்றாவது ஸ்மார்ட்போனாக Narzo 70 Pro 5G அறிமுகம் செய்யவுள்ளது.
Read More – பிளாட் ஒயிட் காபி தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்.!
Realme Narzo 70 Pro 5G டிஸ்பளே & கேமரா :
இந்த ஸ்மார்ட்போனில் பிராண்ட் ‘Duo Touch Glass’ வடிவமைப்பைக் கொண்டிருக்கும். இந்த வடிவமைப்பு POCO சீரியஸின் வடிவமைப்பைப் போன்றது, செவ்வகத்திற்குப் பதிலாக வட்ட வடிவ கேமரா டெகோ உள்ளது. நார்சோ 70 ப்ரோ ஃபிளாட் ஸ்கிரீன் மற்றும் குறுகிய பெசல்களுடன் ஹோல்-பஞ்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
Read More – ஏப்ரல் 1 முதல் டாடாவின் வணிக வாகனங்களின் விலை உயர்வு!
Narzo 70 Pro 5G ஆனது போட்டோகிராஃபி அனுபவத்தை தரக்கூடிய அளவில் அதன் கேமராக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, நார்சோ 70 ப்ரோ மாடலில் 50MP சோனி IMX890 என்ற முதன்மை சென்சார் மற்றும் OIS வசதிகளுடன் ட்ரிபிள் கேமரா அமைப்பு இந்த போனில் இடம்பெறுகிறது. இருப்பினும், இந்த மாடலின் முழு அம்சங்கள் குறித்து இன்னும் வெளியாகவில்லை, விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏர் ஜெஸ்ட்யூர் வசதி :
இந்த மாடலில் ஏர் ஜெஸ்ட்யூர் வசதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஏர் ஜெஸ்ட்யூர் வசதி மூலம் பயனர்கள் ஸ்மார்ட்போன் அம்சங்களை திரையில் நேரடியாக தொடாமல், செய்கைகள் மூலம் இயக்க முடியும். முதற்கட்டமாக இந்த வசதியின் கீழ் 10 வெவ்வேறு சைகைகளுக்கான வசதி வழங்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், மூன்றாம் தரப்பு ஆப்ஸ் பயன்பாடுகளுக்கும் சைகை ஆதரவு கிடைக்கும் என்றும் நிறுவனம் கூறுகிறது.
Read More – டிக்டாக்கை முந்திய இன்ஸ்டாகிராம்..! உலகில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக சாதனை
எதிர்பார்க்கும் அம்சங்கள் :
- Realme Narzo 70 Pro மொபைலானது ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தின் அடிப்படையில் நிறுவனத்தின் Realme UI 5.0 இல் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 5G ஸ்மார்ட்போனாக இந்தியாவில் அறிமுகமாகும்.
- எல்இடி யூனிட்டுடன் இணைக்கப்பட்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இடம்பெற வாய்ப்புள்ளது.
- MediaTek இன் Dimensity 7050 சிப்செட்டுடன் வரக்கூடும்.
- வரவிருக்கும் நர்சோ ஸ்மார்ட்போனின் வலது விளிம்பில் பவர் பட்டன் மற்றும் வால்யூம் ராக்கர் உள்ளது.
- 67w சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது.
Narzo 70 Pro 5G-இன் விலை :
Narzo 70 Pro 5G மொபைலின் விலை குறித்து Realme எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால், இந்தியாவில் ரூ.25,000 க்கும் குறைவாக இருக்கலாம், இதற்கு முன் Narzo 60 Pro 5G இந்தியாவில் ரூ.23,999 விலையில் இருந்தது. இந்த விலையில் Narzo 70 Pro 5G அறிமுகமானால் Realme 12, Realme 12+, Realme 12 Pro அல்லது Realme 12 Pro+ போன்ற ஸ்மார்ட்போன்களுடன் இந்திய சந்தையில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.