முதல் முறையாக ஆஸ்கர் விருதை வென்றார் இயக்குனர் கிரிஸ்டோபர் நோலன்.!
Christopher Nolan: சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை, ‘ஓபன்ஹெய்மர்’ படத்திற்காக கிறிஸ்டோபர் நோலன் பெற்றுள்ளார். 96-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. சிறந்த இயக்குனர், சிறந்த படம், சிறந்த நடிகர் உள்ளிட்ட 7 விருதுகளை ‘ஓப்பன்ஹைமர்’ திரைப்படம் குவித்தது. அதில், சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை கிறிஸ்டோபர் நோலன் பெற்றுக்கொண்டார்.
READ MORE – கண்ணுக்குள்ள நிக்குது! புதுப்பொண்ணு ரகுல் ப்ரீத் சிங்கை மிரள வைத்த புது திரைப்படம்?
முன்னதாக, மொமெண்ட்டோ, இன்செப்ஷன், டன்கிர்க் ஆகிய படங்களுக்காக இதுவரை 7 முறை ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட இவர், தற்போது முதல் முறையாக ஆஸ்கர் விருதினை தட்டிச் சென்றுள்ளார். அதேபோல், சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை ‘ராபர்ட் டவுனி’ பெற்றுள்ளார். இது இவரது முதல் ஆஸ்கர் விருதாகும்.
READ MORE – 10 வருஷமா பண்ணிட்டு இருக்கேன்! ட்ரோல் வீடியோ குறித்து விஷால்!
இந்த விருதை பெற்று கொண்ட கிறிஸ்டோபர் நோலன், “திரைப்படங்கள் 100 வருடங்கள் பழமையானவை, இந்த நம்பமுடியாத பயணம் இங்கிருந்து எங்கு செல்கிறது என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் நான் அதில் ஓரு பகுதியாக இருக்கிறேன் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை அறிவது எனக்கு பெரிது” என பேசியுள்ளார்.
READ MORE – கமல்ஹாசனுடன் பல படங்கள்…அதனால? கேள்விக்கு கடுப்பான ஜெயசுதா!
மேலும், இந்த படத்திற்கான சிறந்த நடிகருக்கான விருதை சில்லியன் மர்பியும், சிறந்த நடிகைக்கான விருதை எம்மா ஸ்டோனும் வென்றனர் இந்த ஆண்டுக்கான சிறந்த இயக்குனர்களின் பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில், ஜொனாதன் கிளேசர், யோர்கோஸ் லாந்திமோஸ், மார்ட்டின் ஸ்கோர்செஸி, மற்றும் ஜஸ்டின் ட்ரைட் ஆகியோர் அடங்குவர்.