குடிப்பொறுக்கிகளின் கூத்தாட்டம்..! அயோக்கியர்கள்… மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை திட்டி தீர்த்த எழுத்தாளர் ஜெயமோகன்

Jeyamohan: ”மஞ்சும்மல் பாய்ஸ்” திரைப்படத்தை மிக கடுமையாக விமர்சித்து சகட்டுமேனிக்கு எழுத்தாளர் ஜெயமோகன் திட்டி தீர்த்துள்ளார். மலையாளத்தில் தயாரான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் அந்த மொழியில் கொண்டாடப்பட்டது போல தமிழ் திரைப்பட ரசிகர்களாலும் பெரியளவில் கொண்டாடப்படுகிறது, விமர்சனங்கள் அமோகமாக வர வசூலும் எந்த குறையும் இல்லாமல் நடக்கிறது, கமல்ஹாசனின் குணா படத்தில் வந்த குகை போலவே தத்ரூபமாக செட் போட்டு படத்தை எடுத்துள்ளது தமிழ் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளது.

Read More – டைட்டான உடை…ஆனா அத காமிக்கல.! ராசி கன்னாவின் கவர்ச்சி போஸ்…

இந்த நிலையில், தமிழக ரசிகர்கள் கொண்டாடும் மஞ்சும்மல் பாய்ஸ் படம் குறித்து பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதில் அவர், மஞ்சும்மல் பாய்ஸ் எனக்கு எரிச்சலூட்டும் படமாக இருந்தது. அதில் காட்டுவது புனைவு அல்ல. தென்னக்கத்தில் சுற்றுலா வரும் கேரளத்துப் பொறுக்கிகளிடம் அதே மனநிலைதான் உள்ளது. குடிகுடிகுடி விழுந்து கிடப்பது, அத்துமீறுவது என மலையாளப் பொறுக்கிகளுக்கு இன்னொரு மொழி தெரியாது. குடியில் தமிழகம் கேரளம் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதையும் சொல்லியாக வேண்டும்.

கேரளத்திலுள்ள வேறுபாடு என்னவென்றால் கேரளம் போதைவெறியை, அதன் எல்லாக் கீழ்மைகளையும் இயல்பானதாக ஆக்கிக்கொண்டே இருக்கிறது. சட்டத்தை மதிக்கும் சாமானியனை மடையனாகவும், உதவாக்கரையாகவும் அது சித்தரிக்கிறது. கேரளக்கடற்கரைகளில் மாலை ஏழு மணிக்குமேல் பெண்கள் மட்டுமல்ல சாமானியர்களான ஆண்கள் கூட செல்லமுடியாது- அதை போலீஸே அறிவுறுத்துகிறது.

Read More – மார்க்கெட் இப்போ வேற! சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய சியான் விக்ரம்!

கேரள சினிமா தொடர்ச்சியாக மகிழ்ச்சியாக இருப்பதென்றாலே குடித்துச் சண்டைபோட்டு, வம்பிழுத்து, வாந்தி எடுத்து, சாமானியர்களை நிலைகுலையச் செய்து கும்மாளமிடுவது என்றே காட்டி வருகிறது. இவர்கள் எடுக்கும் போதைவெறி சினிமாக்களை தமிழகத்தில் கொண்டாடுபவர்கள் அசடுகள் அல்லது அயோக்கியர்கள் என்றே வகைப்படுத்துவேன்.

பொறுக்கிகளை எளியவர்களின் கொண்டாட்டம் என்று காட்டி நியாயப்படுத்துவது மட்டுமல்ல, அவர்களை உன்னதமாக்குகிறது மஞ்ஞும்மல் பாய்ஸ். அவர்களை தியாகிகள், நட்பின் இலக்கணங்கள் என்று சொல்ல முயல்கிறது. எந்த பொறுக்கிக் கும்பலுக்கும் அவர்களுக்குள் ஓர் ஒற்றுமை இருக்கும். குற்றவாளிக் கூட்டங்களுக்குள்ளேயே தியாகவுணர்வு இருக்கும்.

Read More – சுட்டெரிக்கும் வெயில்…பாலைவனத்தில் சிக்கி தவிக்கும் பிரித்விராஜின் ‘ஆடு ஜீவிதம்’ டிரைலர்.!

இந்தக் கும்பல்களைப் பற்றிய விழிப்புணர்வை தமிழகத்திலும் கர்நாடகத்திலும் இந்தச் சினிமா உருவாக்குமென்றால் நல்லது. இவர்களை போலீஸ் நேரடியாகவே குற்றவாளிகளாக மட்டுமே நடத்தவேண்டும். ஒருபோதும் ஒருவகையிலும் ஆதரிக்கக் கூடாது என மிக காட்டமாக விமர்சித்துள்ளார், ஜெயமோகனின் இந்த கடுமையான விமர்சனத்தை பலரும் சமூகவலைதளங்களில் சாடியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்