டிக்டாக்கை முந்திய இன்ஸ்டாகிராம்..! உலகில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக சாதனை

Instagram: உலகளவில் கடந்த ஆண்டு அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் டிக்-டாக்கை பின்னுக்கு தள்ளி இன்ஸ்டாகிராம் முதலிடம் பிடித்துள்ளது. அதன்படி இன்ஸ்டாகிராம் பதிவிறக்கம் 2023ல் 20 சதவீதம் அதிகரித்ததாகவும், மொத்தமாக 767 மில்லியன் முறை இந்த செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டதாகவும் சந்தை நுண்ணறிவு நிறுவனம் சென்சார் டவர் தகவல் வெளியிட்டுள்ளது.

Read More – இந்தியாவில் அறிமுகமாக காத்திருக்கும் IQOO Z9 5G… கசிந்த முக்கிய அம்சங்கள்!

இதன்மூலம், உலகிலேயே அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி என்ற பெருமையை ‘இன்ஸ்டாகிராம்’ பெற்றுள்ளது. இன்ஸ்டாகிராம் செயலி 767 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்ட நிலையில், டிக்டாக் 733 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இன்ஸ்டாகிராமின் இந்த அபார வளர்ச்சிக்கு அதன் ரீல்ஸ் அம்சம் முக்கிய காரணமாக உள்ளதாக கருதப்படுகிறது.

Read More – டிரிபிள் கேமரா..  5000mAh பேட்டரி.. பல அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது Vivo V30 Series!

”இன்ஸ்டாகிராம் கடந்த சில ஆண்டுகளாக டிக்டாக்கைத் மிஞ்சும் வகையில் செயல்படுகிறது. அதன் ரீல்ஸ் அம்சம் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது ”என்று சென்சார் டவரின் மூத்த நுண்ணறிவு மேலாளர் ஆபிரகாம் யூசெப் கூறியுள்ளார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்