” அரசு வேலைக்கு செல்ல ” போட்டி தேர்வுக்கு தயாராக பயிற்சி வகுப்பு..!!

Default Image

ஐ.பி.பி.எஸ். நடத்தும் வங்கி அதிகாரி பணிக்கான எழுத்து தேர்வை சிறப்பாக எழுத உதவும் வகையில் திருச்செந்தூர் சிவந்தி அகாடமி பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது.

திருச்செந்தூர்,
இந்திய வங்கிகள் சங்கம் (ஐ.பி.பி.எஸ்.) நடத்தும் வங்கி அதிகாரி பணிக்கான எழுத்துத் தேர்வு அடுத்த மாதம் (அக்டோபர்) 13, 14, 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெறமென தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இதற்கான விண்ணப்பம் இணையத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சூழலில் இத்தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க இன்று (செவ்வாய்கிழமை) கடைசி நாள் ஆகும்.மேலும் அறிய www.ibps.in என்ற இணையதளத்தின் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த வேலைக்கு போட்டி தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் ஒவ்வொருவரும் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று  20 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.இந்நிலையில் இந்த தேர்வை சிறப்பாக எழுதி வெற்றி பெற சிவந்தி அகாடமி பயிற்சி வகுப்புகளை நடத்த இருக்கிறது..
இந்த பயிற்சி வகுப்புகள் வருகிற 17-ந் தேதி முதல் அடுத்த மாதம் 1-ந் தேதி வரை திருச்செந்தூர், சிவந்தி அகாடமி வளாகத்தில் நடைபெற உள்ளது.
இதற்கான பயிற்சி கட்டணம் ரூ.3,500 ஆகும். பயிற்சி வகுப்பு நடைபெறும் போது எக்காரணம் கொண்டும் வெளியே செல்ல மற்றும் விடுப்பு எடுக்க அனுமதி கிடையாது.பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் ஆண்கள் , பெண்களுக்கு என தனி தனி விடுதி வசதி உண்டு.விடுதியில் தங்கி படிக்க விரும்புபவர்கள்
அதற்கான கட்டணம் ரூ.3,000-ஐ பயிற்சி வகுப்பின் முதல் நாளான 17-9-2018 அன்று நேரில் செலுத்த வேண்டும்.
பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள், ஒரு வெள்ளை தாளில் போட்டோ ஒட்டி பெயர், பின்கோடுடன் முகவரி, தொலைபேசி எண், இ-மெயில் முகவரி மற்றும் விடுதி விருப்பம், ஆகியவற்றை எழுதி அத்துடன் ரூ.3,500-க்கான டிமான்ட் டிராப்ட் (கனரா வங்கி, ஐ.ஓ.பி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி) சிவந்தி அகாடமி, திருச்செந்தூர் என்ற பெயரில் எடுத்து சிவந்தி அகாடமி, தூத்துக்குடி ரோடு, திருச்செந்தூர், -628216, தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பி பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பயிற்சி வகுப்பில் சேர பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை மேலே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டிய கடைசி நாள் 10-9-2018 ஆகும். பயிற்சிக்கான கட்டணம், விடுதிக்கான கட்டணம் ஆகியவை எக்காரணம் கொண்டும் திருப்பி தரப்படமாட்டாது.
மேலும் தகவலுக்கு 04639-242998, 9442055243, 8682985148 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இந்த தகவலை சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் பி.முத்தையாராஜ் தெரிவித்துள்ளார்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்