கருணாநிதியாக நடிக்க ஆசைப்படும் பிரகாஷ்ராஜ்..!எனக்கு எல்லாமே தெரியும் …!
நடிகர் பிரகாஷ்ராஜ் கருணாநிதியின் முழு வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டால் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி இயற்கை எய்தினர்.
பின்னர் கருணாநிதி குறித்த வாழ்க்கை வரலாறு படம் வெளியாகுமா என்ற கேள்வியும் ,அதில் யார் நடிப்பார் என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.இந்நிலையில் அதற்கு நடிகர் பிரகாஷ்ராஜ் அருமையாக பதில் ஒன்றை கூறியுள்ளார்.
அவர் கூறுகையில்,கருணாநிதி மதத்தின் பெயரால் அரசியல் செய்யாத அவரை நான் எப்பொழுதுமே மதிக்கிறேன்.தமிழுக்காக தன் வாழ்க்கையை அர்பணித்தவர். அவரை போல் நான் வாழ்வது கடினம். ஆனால், கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அது வரப்பிரசாதம் என எண்ணுகிறேன் என கூறியுள்ளார்.
பிரகாஷ்ராஜ் மணிரத்தினம் இயக்கிய இருவர் படத்தில் திமுக தலைவர் கருணாநிதியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் நான் கருணாநிதி பற்றி நிறைய ஆய்வு செய்தேன். அவரை பற்றி படிக்கப் படிக்க எனக்கு அவரின் வாழ்க்கை மிகவும் பிடித்துவிட்டது என்றும் கூறியுள்ளார்.